Published : 07 Jun 2019 02:17 PM
Last Updated : 07 Jun 2019 02:17 PM
அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறி, காலி குடங்களுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் கொளகம்பட்டி, ஒட்டர்பாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் குடிநீர் தேவையை போக்க பத்துக்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக, ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார்கள் பழுதாகி உள்ளது. இந்த மின் மாற்றங்களை பகுதியில் இருக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆனால் மின் மோட்டார்களை சரிசெய்து இன்றுவரை ஆழ்துளை கிணற்றில் திறக்கப்படவில்லை. இதனால் இரண்டு கிராமங்களுக்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சேலம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீர் இரண்டு கிராமங்களுக்கு பிரயோகம் செய்யப்படுகிறது.
இந்த கட்டுப்பாடு குறித்து கிராம மக்கள் ஊராட்சி எடுத்தல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தரப்பில் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தக் கிராமத்திலுள்ள ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய நீர்த் தேக்கத் தொட்டியில் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், திடீரென காலி குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் சுகுமார் கிராம மக்களிடையே இந்த பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஊராட்சி எடுத்தார் முறையாக கிராமத்திற்கு வருவதில்லை என்றும், புகார் தெரிவித்தால் அதனை சரி செய்வதில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் ஊராட்சி எழுத்தர் பணி இடமாற்றம் செய்ய வேண்டும், இந்த இரண்டு கிராமங்களுக்கு முறையான குடிநீர் வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் புதிய மின் மோட்டார்களை அமைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்வதாக வட்டாட்சியர் சுகுமார் உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து சாலைமறியல் பொதுமக்கள் கைவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT