Last Updated : 27 Jun, 2019 12:00 AM

 

Published : 27 Jun 2019 12:00 AM
Last Updated : 27 Jun 2019 12:00 AM

தேனியில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு மாற்றாக புதிய நிர்வாகிகளை நியமிக்க குழு அமைப்பு: ஜூன் 29-ல் பட்டியல் வெளியாகிறது

அமமுகவில் தங்க தமிழ்ச்செல்வ னுக்கு பதிலாக புதிய நிர்வாகியை நியமிப்பதற்கான பணி தொடங்கியது. இதற்காக மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் சமீபகாலமாக தலைமைக்குக் கட்டுப்படாமல் ரகசியக்கூட்டங்கள் நடத்துவது, கட்சியின் நிலைப்பாடு என்று தனது கருத்தை தெரிவிப்பது, அதிமுகவில் சேர்வதற்கான முயற் சிகளை மேற்கொள்வது என்று தடம்மாறத் தொடங்கியதாக புகார் கள் எழுந்தன. ஆரம்பத்தில் பெரி தாக எடுத்துக் கொள்ளாத அமமுக தலைமை, பின்னர் இவரது போக்கு கட்சியை பலவீனப்படுத்தும் எனக் கண்டிக்கத் தொடங்கியது. ஏற் கெனவே அதிருப்தியில் இருந்த தங்க தமிழ்ச்செல்வனுக்கு இது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கட்சியில் இருந்து அவர் ஒதுங்கு வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட அமமுக தலைமையும் இவருக்கு மாற்றான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியது.

இதை அறிந்த தங்க.தமிழ்ச் செல்வன், நிர்வாகி ஒருவரிடம் கடுமையாக கோபத்தில் கொந்தளிக்க, அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தேனி மாவட் டத்தைச் சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகள், அவரிடம் இருந்து விலகி கட்சித் தலைமைக்கு தொடர்ந்து புகார்களைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனை நீக்கவும், மாற்றாக வேறு நிர்வாகிகளை நியமிப் பதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.

இதற்காக தேனி மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும், சென்னை சென்று தினகரனை சந்தித்து வருகின்றனர்.

தேனி மாவட்ட புதிய நிர்வா கிகளை நியமிப்பதற்காக தற்போது பொறுப்பாளர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர். இதில் மதுரை மாவட்ட அமமுக செயலாளர் மகேந்திரன், மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை, பெரியகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ. கதிர்காமு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து அமமுகவினர் கூறுகை யில், மூன்று பேர் தலைமையிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் மற்றும் தொண்டர்களிடம் இணக்கமாக இருக்கக்கூடிய, செல் வாக்குள்ள நிர்வாகிகளை நியமிக்க கட்சித் தலைமை கேட்டுக் கொண் டுள்ளது.

தேனி மாவட்ட நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் ஆலோசித்து பெயர் பட்டியல் தலைமைக்கு அனுப்பப்படும். வரும் 29-ம் தேதி புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படுவர், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x