Published : 10 Jun 2019 09:27 AM
Last Updated : 10 Jun 2019 09:27 AM
தமிழக அரசு அறிவித்த பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பயன்பாடு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உரிய வழிகாட்டு தல்களை வழங்காததால் நட வடிக்கை எடுக்க முடியாமல் குழப் பத்தில் இருப்பதாகவும் உள் ளாட்சி அதிகாரிகள் புகார் தெரி வித்துள்ளனர்.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையில் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளிக்கப் பட்டுள்ளதால், மாநிலம் முழுவ தும் அத்தகைய பைகளின் பயன் பாடு அதிகரித்துள்ளது. ஆனால் அவை உண்மையில் மக்கும் தன்மையுடையதா என்பதில் சந் தேகம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் செயலராக முகம்மது நசிமுத்தின் இருந்தபோது அந்த அரசாணை இயற்றப்பட்டது. அதன் பிறகு செயலராக வந்த ஷம்பு கல்லோலிகருக்கு, மக்கும் தன்மை யுள்ள பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளித்ததில் ஆட்சேபம் இருந்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக சில மாதங் களுக்கு முன்பு அவர் கூறும்போது, “பிளாஸ்டிக் பையும் 100 சதவீதம் மக்கும் தன்மையுடையது தான். ஆனால் அதற்கு 400 ஆண்டுகள் ஆகும். 100 சதவீதம் மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகள் என மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சான்றளித்தாலும், எத் தனை நாட்களில் மக்கும் என்பதன் அடிப்படையிலேயே, அவற்றை தமிழகத்தில் அனுமதிக்க முடியும்” என்றார்.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சில மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பை மாதிரிகள் சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் பிளாஸ் டிக் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (CIPET) சோத னைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் என குறிப்பிடப்படும் பைகள், குறிப்பிட்ட காலத்துக்குள் மக்கவில்லை என்று தெரியவந்த தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த விவகாரத் தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அமைதி காத்து வருகிறது. ‘100% மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக்’ என குறிப்பிடப்பட்டுள்ள பைகளை பயன்பாட்டுக்கு அனுமதிப்பதா அல்லது ஆய்வுக்கு உட்படுத்து வதா என்பது குறித்து உறுதியான வழிகாட்டுதல்களை வழங்க வில்லை. அரசாணையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது எனக்கூறி, மக்கும் தன்மையுள்ள பிளாஸ் டிக்கை வணிக நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. அதன் காரணமாக இத்தகைய பிளாஸ் டிக் பைகள் மீது எந்த நடவடிக் கையும் எடுக்க முடியாமல் குழப் பத்தில் இருப்பதாகவும், தடையை அமல்படுத்துவதில் அவை அச்சுறுத் தலாக இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு நகர்ப்புற உள்ளாட்சி அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறும்போது, “மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகள், தாவரங்களில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது வழக்கமான பிளாஸ்டிக் பை களைப் போல அல்லாமல், பட்டுத் துணியைப் போல வழவழப்பாக இருக்கும். அதை சூடான நீரில் கலக்கும்போது, அது கரைய வேண்டும். கரையாத பைகளை, மக்கும் தன்மை அற்றது என எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அந்தந்த பகுதிகளில் பயன்பாட்டில் உள்ள மக்கும் தன்மையுள்ள பை என குறிப்பிடப்பட்டுள்ளவற்றை, உள்ளாட்சி அதிகாரிகள் தான் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்” என்றனர்.
சிப்பெட் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பிளாஸ்டிக் பை களை தயாரிக்கும்போது, அந்த பை உணவுப் பொருள் அடைப் பதற்கா, திரவப் பொருள் அடைப் பதற்கா என எத்தகைய பயன் பாட்டுக்கு தயாரிக்கப்படுகிறது என்பதற்கு ஏற்ப சில ரசாயன சேர்க்கைகள் (Additives) சேர்க்கப் படும். மக்கும் தன்மையுள்ள பிளாஸ் டிக் பைகள் பட்டுபோல மிருது வாக இருக்கும் எனில், அதே போன்று பிளாஸ்டிக் பைகளும் மிருதுவாக இருக்க சில சேர்க்கை களை சேர்த்து தயாரிக்க முடி யும். அவை எல்லாம் 100% மக்கும் தன்மையுள்ள பிளாஸ்டிக் பைகள் கிடையாது. இதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்து விடலாம்.
இவ்வாறு சிப்பெட் நிறுவன அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT