Published : 27 Jun 2019 12:20 PM
Last Updated : 27 Jun 2019 12:20 PM
மேலூர் அருகே இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 11 பேரை போலீஸார் தேடுகின்றனர்.
மதுரை மேலூர் கொடுக்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ராம்பூ (21) திவாகர், தங்கையா, சுரேஷ். இவர்கள், ஜூன் 14 ஆம் தேதி இரவு அதே ஊரில் கோவில் திரு விழாவையொட்டி நடந்த நாடகம் பார்க்கச் சென்றனர்.
கீழவளவு காலனி அருகே அவர்களை அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (19), கல்யானா, நாச்சியப்பன், திருமாவளவன், களஞ்சியம் உட்பட சிலர் வழி மறித்து தகராறு செய்தனர்.
இருதரப்பினரும் இடையே நடந்த மோதலில் கற்கள், கம்பால் ராம்பூ, தங்கையா உட்பட 4 பேர் தாக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராம்பூ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் ராம்பூவின் குடும்பத்தினர், உறவினர்கள் உடலை வாங்க 2 நாட்களாக அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும், கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர்.
ராம்பூ கொலை தொடர்பாக ரவிச்சந்திரன், நாச்சியப்பன், திருமாவளவன் உட்பட 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து ராம்பூவின் உடலை குடும்பத்தினர் வாங்கினர். இவ்வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று மலையரசன் (40) என்பவரும் கைது செய்யப்பட்டார். இவருடன் 18 பேர் கைதாகி உள்ளனர். எஞ்சிய 11 பேரை போலீஸார் தேடுகின்றனர்.
கொடுக்கப்பட்டியில் வேறு எதுவும் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT