Published : 20 Jun 2019 12:00 AM
Last Updated : 20 Jun 2019 12:00 AM

வறட்சியால் குறைந்த வெங்காய விளைச்சல்: வரத்து இன்றி மைசூர் வெங்காயத்துக்கு மவுசு

தமிழகத்தில் உள்ள பெரிய வெங் காய சந்தைகளில் திண்டுக்கல் சந் தையும் ஒன்று. திண்டுக்கல், தேனி, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவு வெங்காயம் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் வறட்சியால் விளைச்சல் குறைந்துவருகிறது. புதிதாக வெங்காயம் நடவு செய்ய பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். இதனால் திண்டுக்கல் சந்தைக்கு போதிய வெங்காய வரத்து இல்லை. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து, லாரிகளில் வெங்காயம் வர வழைக்கப்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.

வாரத்தில் திங்கள், புதன், வெள் ளிக்கிழமை நடைபெறும் சந்தை யில் வழக்கமாக 3000 மூட்டை கள் வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது ஆயிரம் மூட் டைகள்தான் வருகின்றன. தற்போது ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ. 50 வரை தரம் வாரியாக பிரிக்கப்பட்டு மொத்த சந்தையில் விற்கப்படுகிறது.

வெளிச் சந் தையில் தரமான வெங்காயம் கிலோ ரூ. 60 வரை விற்பனையாகிறது. இதுகுறித்து வெங்காய வியாபாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில் வெங்காய அறுவடையை முடித்த விவசாயிகள், வறட்சியால் மீண்டும் வெங்காயம் நடவு செய்யத் தயங்கி வருகின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் வெங்காய வரத்து முற்றிலுமாக இல்லை. இதனால் மைசூரில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகிறது. அதுவும் குறைந்த அளவுதான் கிடைக்கிறது.

இதனால் விலை உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தேவை அதிகரிக்கும் பட்சத்தில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும். தென்மேற்குப் பருவமழை விரைவில் பெய்யத் தொடங்கினால் நடவுப் பணிகளை விவசாயிகள் தொடங்கி விடுவர். உள்ளூர் வெங்காய வரத்து தொடங்கினால்தான் வெங்காயத்தின் விலை குறையும் என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x