Last Updated : 03 Jun, 2019 12:42 PM

 

Published : 03 Jun 2019 12:42 PM
Last Updated : 03 Jun 2019 12:42 PM

புதுச்சேரி சபாநாயகராக பதவியேற்ற சிவகொழுந்து: எதிர்க்கட்சியினர் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பு

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சிவகொழுந்து பதவியேற்றார். கால அவகாசம் வழங்காமல் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக கூறி ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினர் பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர்.

புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டதால் சபாநாயகர் பதவியை வைத்திலிங்கம் ராஜிநாமா செய்தார். அதையடுத்து காலியாக இருந்த சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறும் என சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயர் அறிவித்து இருந்தார்

மேலும், நேற்று பகல் 12 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி சார்பில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் துணை சபாநாயகராக இருந்த சிவகொழுந்து வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், இன்று (திங்கள்கிழமை) சபாநாயகர் தேர்தல் நடத்துவதற்காக காலை 9.40 மணிக்கு பேரவை கூடியது. கூட்டத்தை தற்காலிக சபாநாயகர் அனந்தராமன் தொடங்கி வைத்து சபாநாயகர் தேர்தலில் போட்டியின்றி சிவகொழுந்து தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையில் சிவகொழுந்துவை அமரவைத்து பதவியேற்பு செய்து வைத்தனர். கால அவகாசம் வழங்காமல் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக கூறி என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் என ஒட்டுமொத்த எதிரக்க்கட்சியினரும் பேரவை கூட்டத்தை புறக்கணித்தனர்.

புதியதாக பதவியேற்றுக்கொண்ட சபாநாயகர் சிவகொழுந்துவை பேரவையில் முதல்வர் நாராயணசாமி வாழ்த்திப் பேசிய போது, கால அவகாசம் வழங்கப்பட்டு தான் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதாக பேரவை நிகழ்வுகளை புறக்கணித்த எதிர்க்கட்சியினருக்கு முதல்வர் நாராயணசாமி பதில் அளித்தார்.

முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தை புறக்கணித்து இருந்தாலும் சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக சட்டப்பேரவை குழு தலைவர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் சபாநாயகர் தேர்தலை ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆளுங்கட்சியினர் தோல்வி பயத்தால் அவசரமாக நடத்தியுள்ளனர். கால அவகாசம் வழங்காமல் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்தும் அவர் நடவடிக்கை எடுக்கவில்லை, முதல்வரின் சட்டவிரோதமான செயலுக்கு ஆளுநர் துணை போவதாக தெரிகிறது.

கால அவகாசம் வழங்காமல் சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக சட்ட ரீதியாக அணுக உள்ளோம் என்றார்.

இதேபோல் பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாமிநாதன் பேசுகையில் சபாநாயகர் தேர்தலை கால அவகாசம் வழங்காமல் அவசர, அவசரமாக நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டும் அதையும் மீறி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. பணத்தால் இந்த தேர்தல் நடத்தப்பட்டு சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என குற்றம்சுமத்தினார்.

முதல் கடிதம்:

சபாநாயகர் பதவி ஏற்புக்கு பிறகு தனது அறைக்கு சிவகொழுந்து திரும்பினார். அவரிடம், எம்பியாக தேர்வான வைத்திலிங்கம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x