Last Updated : 18 Jun, 2019 09:11 PM

 

Published : 18 Jun 2019 09:11 PM
Last Updated : 18 Jun 2019 09:11 PM

பதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்

இன்று நாடாளுமன்றத்தின் மக்களவை எம்.பி.யாகப் பதவியேற்க தமிழக உறுப்பினர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன் தாயுடன் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

17-வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாவது நாளாக இன்று எம்.பி. பதவியை ஏற்றனர். இதில், வந்த தமிழக எம்.பி.க்கள் 38 பேரும் பதவி ஏற்றனர்.

இப்பதவி ஏற்பினை மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தபடி தமிழக எம்.பி.க்களின் குடும்பத்தினர் பலரும் இடம்பெற்றிருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் தம் மனைவி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாரை அழைத்து வந்திருந்தனர்.

மக்களவை சிறப்பு மாடத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தன் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பதவியேற்பைக் காண வந்திருந்தார். இவரது அருகில் தனது மகன் டாக்டர் விஷ்ணு பிரசாத்தின் பதவி ஏற்பிற்காக அவரது தந்தை கிருஷ்ணசாமியும் அமர்ந்திருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பதவியேற்பைக் காண அவரது தாய் பெரியம்மாள் வந்திருந்தார். பதவி ஏற்பிற்குப் பின் அவர் தன் மகனை நாடாளுமன்ற வளாகத்தில் ஆசி அளித்து மகிழ்ந்தார்.

தன் தாயுடன் திருமாவை நாடாளுமன்ற வளாகத்தில் பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். இவர்களில் இருந்த தமிழர்கள் ஆர்வமுடன் திருமாவின் தாயிடம் நலம் விசாரித்தனர்.  இவர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றொரு எம்.பி.யும் அதன் பொதுச்செயலாளருமான ரவிகுமாரும் உடன் இருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x