Published : 05 Jun 2019 12:35 PM
Last Updated : 05 Jun 2019 12:35 PM
தனியார் பள்ளிகளில் படித்து வந்த தமது குழந்தைகளை மதுரை அருகே யா.ஒத்தக்கடை அரசு தொடக்கப் பள்ளியில் சேர்க்க பெற்றோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
யா.ஒத்தக்கடையில் இயற்கை எழில் சூழ்ந்த மலையடி வாரத்தில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. இப்பள்ளி வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரங்கள் உள் ளன. திறன்மிகு ஆசிரியர்கள், காற்றோட்டமான சூழல், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கணினி, சுற்றுச்சுவரில் ஓவியங்கள், முறை யான கழிவறை வசதிகள் என தனியார் பள்ளிகளுக்கு நிகராக இப்பள்ளி உள்ளது.
இதனால் தமது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்க்க பெற் றோரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற் றோர் பள்ளி திறக்கும் முன்பே வந்து பல மணி நேரம் காத்திருந்து தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு 520 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை தற்போது 600-ஐ கடந்து விட்டது.
இப்பள்ளித் தலைமை ஆசிரியர் மு.தென்னவன் கூறியதாவது: அரசுப் பள்ளியில் படித்தோமே என யாரும் வருத்தப்படாத வகையில் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கலைகள், படைப்பாற்றல் கல்வி மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கிறோம். மாதம்தோறும் மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், கூட்டங்களை நடத்தி பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தயாரி த்து செயல்படுத்துகிறோம்.
பொதுநல அமைப்புகள், தன் னார்வலர்கள் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறை , 20 கணினிகள், முறையான கழிவறை வசதிகளைச் செய்துள்ளோம்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி நாடகவியல் பேராசிரியர் பிரபா கரின் முயற்சியில் 4,5-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாடகக் கலையை கற்றுக் கொடுத்து அரங்கேற்றம் செய்து பலரது பாராட்டை பெற்றோம். மேலும் பள்ளி மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி என திறன்வளர் குழுக்களை அமைத்து ஊக்கப்படுத்தி வருகிறோம். இதை அறிந்த பெற்றோர் தனி யார் பள்ளிகளில் படித்து வந்த தங்களது குழந்தைகளை சேர்க்க விரும்பி அழைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT