Last Updated : 22 Jun, 2019 09:41 AM

 

Published : 22 Jun 2019 09:41 AM
Last Updated : 22 Jun 2019 09:41 AM

அறிவிக்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்தன: இழுத்தடிக்கப்படும் புதுச்சேரி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்

'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதுச்சேரி தேர்வாகி இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும் இதுவரையிலும் எவ்வித பணிகளும் குறிப்பிட்டத்தக்க வகையில் நடக்கவே இல்லை. 5.5 கி.மீ சுற்றளவுக்கு ரூ. 1,850 கோடி நிதியில் பணிகள் நடக் கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மக்க ளுக்கான அடிப்படைத் திட்டம் கூட முடங்கி கிடக்கிறது.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்றத் திட்ட மிட்டு, 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் கொண்டு வரப் பட்டது. இதற்காக 100 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதில் ஒன்று புதுச்சேரி.

முதல் கட்டமாக புதுவை சேதராப்பட்டு பகுதியில் 'ஸ்மார்ட் சிட்டி' அமைக்க திட்டமிட்டு, அதற்கான கோப்புகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் அனுப்பப்பட்டது. முதல் சுற்றில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அதற்கு ஒப்புதல் தரவில்லை. இரண்டாவது சுற்றிலும் மத்திய அரசு நிராகரித்து விட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு பதவியேற்றது.

புதுச்சேரி நகர் பகுதியையும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இடம் பெறச் செய்யும் வகையில் பாரம்பரியமாக உள்ள பிரெஞ்சு கட்டடக் கலையைக் கொண்ட புதுவை நகரம் மற்றும் உருளையன்பேட்டை, முத்தி யால்பேட்டை, உப்பளம் ராஜ்பவன், நெல்லித்தோப்பில் தலா ஒரு பகுதியை இணைத்து 5.5 கி.மீ. சுற்றளவுக்கு வரைபடம் தயார் செய்து வல்லுநர்களுடன் பல ஆலோ சனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கோப் புகள் தயார் செய்யப்பட்டன. முதல்வர் நாரா யணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் இணைந்து டெல்லிக்கு சென்று முயற்சி எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து மத்திய அரசு 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதுச்சேரியைத் தேர்வு செய்து கடந்த 2017 ஜூன் 23ல் அறிவித் தது. மத்திய அரசில் இருந்து முதன் முறை யாக புதுச்சேரிக்கு கிடைத்துள்ள பெரிய திட்டம் இதுவாகும்.

இத்திட்டத்துக்கு ரூ.1,850 கோடி ஒதுக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.500 கோடி, பிரெஞ்சு அரசு ரூ.500 கோடி, வெளிச்சந்தையில் ரூ.350 கோடி என நிதி பெற முடிவு எடுக்கப்பட்டது.

இத்திட்டப்படி 24 மணி நேரம் மின்வசதி, குடிநீர் வசதி, பாதாள சாக்கடை திட்டம், தேவையான இடங்களில் மேம்பாலம், தரமான மருத்துவமனை, பள்ளிகள் புதுப் பிப்பு, தற்போதைய பேருந்து நிலையம் சீரமைப்பு, வாகன நிறுத்துமிடம் ஏற்படுத் துதல், மார்க்கெட் சீரமைப்பு, சாராய ஆலை அருகே உள்ள இடத்தை கலாச்சார அரங்கமாக மாற்றுதல், ஒருங்கிணைந்த போக்குவரத்து வளர்ச்சித் திட்டம் (எம்ஆர்டிஎஸ்) கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து வசதிக்காக டிராம், மோனோ ரயில் விடுதல், மின்சார பேருந்து ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை செயல்படுத்துவோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத் துக்காக புதிய நிறுவனமான பிஎஸ்சிடிஎல் (புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட்) தொடங்கப்பட்டது. 4 ஆண்டுக் குள் இப்பணியை நிறைவு செய்ய திட்டமி ருந்தாலும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவு செய்ய முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தி யிருந்தார்.அதைத்தொடர்ந்து 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தொடங்கின. இத்திட்டத்துக்கு பின்பு புதுச் சேரியின் முக்கியப் பகுதிகள் வர உள்ள நிலை தொடர்பான வரைப்படங்களும் வெளியானது. குறிப்பாக 10 கி.மீ தொலை வுக்கு சைக்கிள் தடம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றன.

முக்கியமாக பிரெஞ்சு காலத்தில் அமைக்கப்பட்ட கிராண்ட் கேனால் எனப்படும் பெரிய கால்வாய் திட்டம் 3 கி.மீ தொலைவுக்கு ரூ.157 கோடி செலவில் சீரமைக்கப்படும். கால்வாயை சீரமைத்து, நடைபாதை, சைக்கிள் தடம், உணவகங்கள் அமைக்கப்படும். பிரான்ஸ் நாட்டு கலாச்சாரப்படி நகரில் கால்வாய் மூலம் படகு போக்குவரத்து ஏற்படுத்துவ தாக அறிவித்தனர். அதைத் தொடர்ந்து குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 454 கோடி கடனுதவி செய்ய பிரெஞ்சு ஏஎப்டி வங்கியுடன் புதுச்சேரி அரசு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது.

இப்படியாக இத்திட்டத்தில் மொத்தம் 63 திட்டங்கள் மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகியும் ஒரு திட்டம் கூட முழுமை யடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு வட்டாரங்களில் விசாரித்த போது, "மத்திய அரசு ஏற்கெனவே ரூ. 100 கோடி முதல் தவணையாக 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்துக்கு ஒதுக்கியுள்ளது. அது வங்கியில்தான் உள்ளது. 50 இடங்களில் தண்ணீர் ஏடிஎம் திட்டம், நவீன கழிவறை திட்டம், அடுக்குமாடி வீடு கட்டும் திட்டம் உட்பட பல திட்டங்களுக்கான டெண்டர் கோப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அது 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவன தலைவர் ஒப்புதல் கிடைத்தவுடன் தலைமை செயல ருக்கு அனுப்பப்பட்டு, டெண்டர் விடப் பட்டு, இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்கும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலானதால்தான் நடுவில் தாமதம் ஏற்பட்டது" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x