Last Updated : 13 Jun, 2019 12:00 AM

 

Published : 13 Jun 2019 12:00 AM
Last Updated : 13 Jun 2019 12:00 AM

பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சப்-டிவிசன் வாரியாக ‘மகளிர் காவல் நிலையம்’

கோவை மாவட்ட பகுதியில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சப்-டிவிசன் வாரியாக ‘மகளிர் காவல் நிலையம்’ ஏற்படுத்த மாவட்ட போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல் துறை நிர்வாகம் பேரூர், பெரியநாயக் கன்பாளையம், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய ஐந்து சப்-டிவிசன்களுடன் (உட்கோட்டங்கள்) 36 காவல் நிலையங்களை கொண்டு செயல்படுகிறது. இங்கு தினசரி அடிதடி, தகராறு, மோதல் உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சார்ந்த புகார்கள், திருட்டு, கொள்ளை, கூட்டுக் கொள்ளை, நகைப்பறிப்பு, வழிப்பறி போன்ற குற்றம் சார்ந்த புகார்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் போன்றவை பெறப்படுகின்றன.

‘‘தற்போதைய சூழலில் சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன. கோவை மாவட்ட காவல்துறைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில், பெண்களுக்கு எதிரான குற்றங் கள் தொடர்பான புகார்கள் அதிகளவில் பெறப்படுகின்றன. ஆபாசமாக திட்டினர், கொலை மிரட்டல், மானபங்கம், பாலியல் தொந்தரவு, திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம், ஆபாச படம் எடுத்து மிரட்டல் என்பது போன்ற புகார்கள் பெண்களால் பெறப்படுகின்றன. பெண்கள் தங்களது பிரச்சினை தொடர்பாக, சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களில் புகார்அளித்தாலும், அந்த வழக்கு அனைத்து மகளிர் காவல் நிலை யத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு, மகளிர் காவல் ஆய்வாளர்களால் விசாரிக்கப்படுகின்றன. பின்னர் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

 மாவட்ட காவல் துறையில், கடந்த ஆண்டு 131 பேர் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டும் குறிப்பிட்ட சதவீதம் பேர் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர். போக்ஸோ, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பெண்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக வழக்குபதிந்து விசாரிக்கப்படுகின்றன’’ என மாவட்ட போலீஸார் தரப்பில் கூறப்படுகின்றன.

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சுஜித்குமார் கூறும் போது, ‘‘மாவட்டத்தில் தற்போது 5 சப்-டிவிசன்கள் இருந்தாலும், பேரூர், பெரியநாயக்கன்பாளையம் (துடியலூர்), பொள்ளாச்சி ஆகிய மூன்று சப்-டிவிசன்களில் தான் மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. மகளிர் காவல் நிலையம் இல்லாத மற்ற சப்-டிவிசன் களில் பெறப்படும் பெண்கள் பாதிப்பு தொடர்பான புகார்கள், அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்படுகின்றன. பெண் களுக்கு எதிரான குற்றங்களை விரைவாக விசாரிக்க மீதமுள்ள சப்-டிவிசன்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதல்கட்டமாக கருமத்தம்பட்டி சப்-டிவிசனில் மகளிர் காவல் நிலையம் அமைக்க காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்துக்கு சமீபத்தில் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மகளிர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், போலீஸார் என குறைந்தபட்சம் 12 மகளிர் போலீஸார் நியமிக்க வலியுறுத்தப் பட்டுள்ளது. இந்த கருத்துரு தொடர்பாக மீண்டும் நினைவூட்டல் செய்யப்படும்’’ என்றார்.

உடனடியாக வழக்கு பதிந்து விசாரணை

மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் இருசக்கர வாகன திருட்டு, லேப்டாப் திருட்டு, செல்போன் திருட்டு, குறைந்த அளவிலான பணம் திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதில்லை, சிஎஸ்ஆர் ரசீது மட்டும் வழங்கப்படுகிறது என பொதுமக்களால் புகார்கள் கூறப்படுகின்றன. இது தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் கூறும்போது,‘‘ மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிந்து விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x