Published : 26 Jun 2019 08:21 AM
Last Updated : 26 Jun 2019 08:21 AM
பழமை மாறாமல் ரூ. 1 கோடி யில் புதுப்பிக்கப்பட்டு, மூன்றாண்டு களிலேயே முன்பக்கத்தில் சுவரில் காரை பெயர்ந்து, நுழைவாயிலில் பள்ளங்களுடன் பரிதாபமான நிலையில் பாரதியார் இல்லம் முகப்பு மாறியுள்ளது.
விடுதலைப் போராட்டத்தின் போது பிரான்ஸ் வசமிருந்த புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள வீட்டில் பாரதியார் தனது குடும்பத்துடன் வசித்தார். அவரது வாழ்வில் முக்கிய பகுதி யான 1908 முதல் 1918 ஆண்டு வரை இவ்வீட்டில்தான் வசித்தார். முக்கிய கவிதைகள் தொடங்கி ‘குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு உள்ளிட்ட படைப்பு களை இங்கிருந்தபோதுதான் படைத்தார்.
புதுச்சேரியில் பாரதியார் வசித்த வீட்டை அரசு அருங்காட்சியக மாகவும் நூலகமாகவும் அரசு பராமரிக்கிறது.
புதுச்சேரியில் பாரதி தங்கி யிருந்தபோது எழுதிய கவிதை களின் கையெழுத்துப் பிரதிகள், ஆவணங்கள் எல்லாம் அரிய பொக் கிஷங்களாக இங்கு உள்ளன. பழமையான நினைவு இல்லக் கட்டிடத்தில் பழுது ஏற்பட்டதால் கட்டிடத்தைப் புதுப்பிக்கும் பணி காரணமாக பாரதியார் இல்லம் 2009-ல் தற்காலிகமாக மூடப்பட்டது. நிதி பற்றாக்குறையால் பணிகள் நடக்காமல் இருந்தன.
இதையடுத்து, ‘இந்து தமிழில்’ 2013-ம் ஆண்டு செய்தி வெளியா னது. அதைத் தொடர்ந்து கலை பண்பாட்டுத் துறை மூலம் ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டு, பழமையான கட்டிடங்களை பாதுகாக்கும் ‘இன்டாக்' அமைப்பினர் பாரதியார் இல்லத்தை சீரமைக்கும் பணியை 2014-ல் தொடங்கினர். பணிகள் நடந்து வந்த நிலையில் நிதி ஒதுக்குவதில் அரசு சிறிது கால தாமதம் செய்ததால் புதுப்பிக்கும் பணி பாதியில் நின்றது. மீண்டும் 2015-ம் ஆண்டு ‘இந்து தமிழில்’ செய்தி வெளியானது. அரசு மீண்டும் நிதி ஒதுக்கியது.
இதையடுத்து பணிகள் நடந்து, பாரதி வீடு புதுப்பிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் பார்வையா ளர்களுக்காக திறக்கப்பட்டது.
பொக்கிஷமாக பாதுகாக்கப் பட்ட பாரதியின் 17 ஆயிரம் புத்த கங்கள், ஆவணங்கள், பாரதி யாரின் அரிய கையெழுத்து பிரதிகள், அரிய புகைப்படங்கள், அவர் அமர்ந்த இருக்கைகள் தொடங்கி பல அபூர்வமானவை இந்த நினைவு இல்லத்தில் காணக் கிடைக்கின்றன.
சுண்ணாம்பு கலவை கொண் டும், மெட்ராஸ் டைல்ஸ் மற்றும் கட்டுமானப் பொருட்கள் கொண் டும் பழமை மாறாமல் இந்த நினைவு இல்லம் புதுப்பிக்கப்பட்டதாக இன்டாக் தெரிவித்திருந்தது.
ரூ. 1 கோடியில் புதுப்பிக்கப் பட்ட நிலையில் 3 ஆண்டுகளி லேயே தற்போது பாரதி இல்லம் பரிதாபமான நிலையை அடைந்துள் ளது. முகப்பில் காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. தரைகளில் உடைசல்கள் ஏற் பட்டுள்ளன.
இதுதொடர்பாக புதுவை அருங்காட்சியகம் (தேசிய மரபு அறக்கட்டளை) நிறுவனர் அறிவன் கூறும்போது, ‘‘புதுப்பிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளில் இவ்வரலாற்று மரபுக் கட்டிடத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
பாரதியார் வாழ்ந்த தெருவின் பெயர் தன்னுடைய கவிதைகளிலும் ஆவணப்படுத்தப்பட்டிருப்பது ஒரு சிறப்பாகும். அவர் வாழ்ந்த தெருவில் உள்ள அவருக்கான அடையாளமாகத் திகழும் வீடு, அருங்காட்சியகமாகவும் ஆய்வக மாகவும் உள்ளது நமது தமிழ் மக்களுக்கான பெருமை.
உடனடியாக அரசு இந்த நிலையை ஒழுங்குபடுத்திட வேண்டும். கண்காணிப்பு கருவி கள் அமைத்து பகல் - இரவு நேரக் காவலர்களை நியமிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட் டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT