Published : 12 Jun 2019 09:12 AM
Last Updated : 12 Jun 2019 09:12 AM
தமிழகத்தில் கட்டுப்பாடற்ற முறை யில் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள் ளன. இவை விரைவில் அமலுக்கு வருகின்றன.
தண்ணீர் தட்டுப்பாட்டை பயன் படுத்தி, லாப நோக்கில் கட்டுப் பாடில்லாமல் நிலத்தடி நீரை உறிஞ் சும் போக்கு அதிகரித்துள்ளது. இதேநிலை நீடித்தால், கடலோர மாவட்டங்களில் கடல்நீர் உட்புகு வதை தடுக்க முடியாது. மற்ற பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக் கும். எனவே, நிலத்தடி நீர் உறிஞ்சு வதை முறைப்படுத்த கடும் நிபந் தனைகளுடன் வழிகாட்டு நெறி முறைகளை தமிழக அரசு இறுதி செய்துள்ளது.
இதுகுறித்து அரசு உயர் அதி காரி ஒருவர் கூறியதாவது: தமிழ் நாட்டில் கடினப்பாறைப் பகுதி, மணற்பாங்கான பகுதி என 2 வகை கள் உள்ளன. நிலத்தடி நீர்மட் டத்தைக் கணக்கிடுவதற்கு சுமார் 3 ஆயிரம் திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவற்றில் 386 இடங்களில் ரூ.5 கோடியே 70 லட்சம் செலவில் அதிநவீன கருவிகள் பொருத் தப்பட்டு கணக்கிடப்படவுள்ளன.
நிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் உறிஞ்சப்படுவதால், நீர்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. கோவை, ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஆயிரம் அடி வரை ஆழ்துளை கிணறுகள் போடப்படுகின்றன. மற்ற மாவட்டங்களில் 300 அடிகள் சர்வசாதாரணம். தற்போது நிலத் தடி நீர் எடுப்பதைக் கட்டுப்படுத்த 2014-ம் ஆண்டு அரசாணை (142) மட்டுமே உள்ளது. இதைக் கொண்டு விதிமீறுவோரை கடுமை யாக தண்டிக்க வழியில்லை. அத னால், குடிநீருக்காகவும் தொழிற் சாலைக்காகவும் நிலத்தடி நீர் உறிஞ்சுவதை நெறிப்படுத்த நிபந் தனைகளுடன் வழிகாட்டு நெறி முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சென்னை குடிநீர் வாரியம், பொதுப்பணித் துறை, நிலத்தடி நீர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் கொண்ட குழு 3 முறை கூடி, விவாதித்து வழிகாட்டு நெறி முறைகளை இறுதி செய்திருக் கிறது. இதுதொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு விரைவில் வெளி யாகும். அதைத்தொடர்ந்து சட்டம் இயற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமலுக்கு வந்தபிறகு, நிலத்தடி நீர் எடுக்க அனுமதி கோரினால், குறிப்பிட்ட இடத்தை அதிகாரிகள் குழு ஆய்வு செய்யும். பின்னர் அந்த இடத்தில் உள்ள நீர்வளம், எவ்வளவு நீர் எடுக்கலாம் ஆகியன அறிவியல்பூர்வமாக ஆய்வு செய் யப்பட்ட பிறகே அனுமதி அளிக்கப் படும். அத்துடன் நீர் அளவீட்டுக் கருவியும் பொருத்தப்படும். அளவை மீறி நீர் உறிஞ்சுவோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சியதால் சென்னை அருகே மீஞ்சூரில் கடல்நீர் உட் புகுந்துள்ளது. இதுபோல கடலோர மாவட்டங்களில் எத்தனை இடங் களில் கடல்நீர் உட்புகுந்துள்ளது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் 40 பேர் ஆய்வு செய்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக நிலத்தடி நீரை அந்தந்த கிராம மக்களே பராமரிக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முன்னோட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 கிராமங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள மக்களிடம் மழை மற்றும் செயற்கை செறிவூட்டுதல் மூலம் பூமிக்குள் செலுத்தப்படும் தண்ணீரின் அளவு, அதன் தரம், எவ்வளவு தண்ணீர் எடுக்கலாம், அளவுக்கு அதிகமாக எடுத்தால் ஏற்படும் ஆபத்து உள்ளிட்டவற்றை நேரடியாக எடுத்துரைத்து நிலத்தடி நீர் மட்டத்தை அவர்களே பராமரிக்கும் வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT