Published : 18 Jun 2019 12:00 AM
Last Updated : 18 Jun 2019 12:00 AM
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதி, பல வண்ணங்களில் மிளிரும் கட்டிடங்கள், ‘ஸ்மார்ட் கிளாஸ்' எனப்படும் சீர்மிகு வகுப்பறைகளில், திறன்மிகு ஆசிரி யர்களின் கற்பித்தலில் ஒளிர்கின்ற னர் மாணவர்கள். ஆம், இவற்றை சாத்தியப்படுத்தியுள்ளது ஓர் அரசு பள்ளி.
கோவை மாவட்டம் துடியலூரை அடுத்துள்ள அசோகபுரத்தில் அமைந்துள்ளது இந்த ‘ஹைடெக்' அரசு மேல்நிலைப் பள்ளி. பெரிய நாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 1962-ம் ஆண்டு, கோவை மாவட்ட ஆட்சி யராக எஸ்.பி. அம்புரோஸ் பணி யாற்றிய காலத்தில், அப்போதைய முதல்வர் எம்.பக்தவத்சலத்தால் திறந்து வைக்கப்பட்டது இப்பள்ளி.
57 வருட கல்விப் பணியில் பல்லாயிரக்கணக்கான மாணவர் களை உருவாக்கி, ஆலமரமாக வளர்ந்து நிற்கும் இப்பள்ளி பல் வேறு புதுமைகளுக்கும், சாதனை களுக்கும் சொந்தமாகியுள்ளது.
மாதிரி பள்ளி
இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை எஸ்.ராஜ லட்சுமி கூறும்போது “தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை கடந்த 2018-2019-ம் கல்வி ஆண்டில் கோவை மாவட்டத்தின் 'மாதிரி பள்ளி'யாக (மாடல் ஸ்கூல்) எங்கள் பள்ளியை தேர்வு செய்து அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.50 லட் சம் நிதி ஒதுக்கீடு செய்ததில், முதல் கட்டமாக பெற்ற ரூ.30 லட்சம் நிதியில், வகுப்பறைகளின் தரைப் பகுதியில் கிரானைட் பதித்தல், நூலகம் அமைத்தல், மழலையர் வகுப்புக்கு உபகரணங்கள் வாங்கு தல், குழந்தைகளுக்கு விளையாட் டுப் பொருட்கள் வாங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
ஒரு தனியார் நிறுவனம் எங்கள் பள்ளியை தத்தெடுத்து பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்திக் கொடுத்துள்ளது.
இப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 1,500 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களால் இந்த ஆண்டு பொதுத் தேர்வில் 10-ம் வகுப்பில் 208 பேரில் 194 பேரும், பிளஸ் 1 வகுப்பில் 239 பேரில் 232 பேரும், பிளஸ் 2 வகுப்பில் 270 பேரில் 262 பேரும் தேர்ச்சி பெற்றனர். 480 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற 34 பிளஸ் 2 மாணவர்களின் கல்விச் செலவை மற்றொரு தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது. 'நீட்' உள்ளிட்ட போட்டித் தேர்வு களுக்கும் மாணவர்கள் தயார்படுத் தப்பட்டு வருகின்றனர்” என்றார்.
பள்ளி வளாகத்தில் காய்கறி தோட்டங்கள், குடிநீர் தொட்டிகள், பிளாஸ்டிக் குப்பை போடுவதற்கு நீலநிற குப்பைத் தொட்டி, காகிதம் போன்ற குப்பை போடுவதற்கு பச்சை நிற குப்பைத் தொட்டி அமைத்து வளாகத்தில் சிறு காகிதத் துண்டைகூட பார்க்க முடியாத அள வுக்கு தூய்மைப் பள்ளி'யாகவும் மாறியுள்ளது, இப்பள்ளி.
மழலையர் வகுப்பில் 40 குழந்தை
“அரசுப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இப்பள்ளியில் மழலையர் வகுப்பு கடந்த ஜூன் 3-ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. 40 குழந் தைகள் சேர்ந்துள்ளனர்.
மழலையர் வகுப்புக்கு அமைக்கப்பட்டுள்ள 'ஸ்மார்ட் வகுப்பறை'யில் அமர் வதற்கு பலவண்ண குட்டி நாற் காலிகள், வட்டமான மேஜைகள், குழந்தை பாடல் ஒலிபரப்பு, வகுப் பறை சுவற்றில் வெளிநாட்டு மாதிரியைக் கொண்டு ஓவியங் கள், விரிப்புகள் போன்றவை குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
மழலையர் வகுப்பு ஆசிரியர் இன்னும் நியமிக்கப்படாத நிலையில், சுழற்சி முறையில் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே குழந்தைகளை கவனித்துக் கொள்கிறோம்” என் கின்றனர், இப்பள்ளி ஆசிரியர் கள். கோவையில் மழலையர் வகுப்பில் இவ்வளவு குழந்தை கள் சேர்ந்துள்ளதும், இப்பள்ளி யில்தான் என்பது குறிப்பிடத் தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT