Published : 09 Jun 2019 12:00 AM
Last Updated : 09 Jun 2019 12:00 AM

கொடைக்கானலில் குவியும் காலி மது பாட்டில்கள்: வனவிலங்குகள், இயற்கைச் சூழல் பாதிக்கும் அபாயம்

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வீசியெறியும் காலி தண்ணீர் பாட்டில் மற்றும் மது பாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

கொடைக்கானலுக்கு கோடை சீசனை முன்னிட்டு, கடந்த இரண்டு மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. சுற்றுலா வருபவர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பாலித்தீன் பைகளைத் தவிர்க்க வேண்டும் என நகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகளும் ஏற்று அவற்றை தவிர்த்துவிட்டு வருகின்றனர். ஆனால் வந்த இடத்தில் நகர் பகுதியில் பாலித்தீன் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் உள்ளிட்ட தின்பண்டங்கள், அதிகப்பட்சமாக ஒருமுறை பயன்படுத்தப்படும் குடிநீர் பாட்டில்கள், மதுபாட்டில் விற்பனையும் அதிகம் நடக்கிறது. இவற்றை தாராளமாகப் பயன்படுத்தும் சுற்றுலாப் பயணிகள் காலியான மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில்களை சுற்றுலாத் தளங்களில் வீசியெறிந்து விட்டுச் செல்கின்றனர்.

இதனால் நகர் வீதிகளில் எங்கு பார்த்தாலும் காலி குடிநீர் பாட்டில்கள் காணப்படுகின்றன. பல இடங்களில் காலி மதுபாட்டில்களும் குவி யலாக கிடக்கின்றன.

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்களில் 5 சதவீதம் பேர் மட்டுமே இயற்கை எழிலை ரசிக்க வருகின்றனர். பெரும்பாலானோர் கொண்டாட்டத்துக்கு வருவது போல் திறந்தவெளியில் மது குடித்துவிட்டு வனப்பகுதிக்குள் பாட்டில்களை வீசி செல்கின்றனர். இதேபோல் காலி தண்ணீர் பாட்டில்களும் கிடக்கின்றன. நகராட்சி நிர்வாகம் முறையாக திடக்கழிவு மேலாண்மை செய்வதில்லை. சீசன் தொடங்கிய முதல மாதத்தில் மட்டும் 600 கிலோ பாலித்தீன், பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. வனத்தையும், இயற்கையையும் காக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x