Published : 18 Jun 2019 11:36 AM
Last Updated : 18 Jun 2019 11:36 AM
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடப்பதாகவும், அதில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் துணை வேந்தர் எம். கிருஷ்ணன் தெரிவித்தார்.
மதுரை காமராசர் பல்கலை.யில் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் நடந்தது. இங்குள்ள 54 துறைகளுக்கும் முதன்முறையாக கலந்தாய்வு மூலம் நுழைவுத்தேர்வு ரேங்க் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சில துறைகள் தவிர பிற துறைகளுக்கு போதிய விண்ணப்பங்கள் வராத பட்சத்தில் ‘ஸ்பாட் அட்மிஷன் சேர்க்கை நடக்கிறது. இருப்பினும், முழுவதும் நிரப்பப்படாத துறைகளுக்கு ஆகஸ்ட் 31 வரை மாணவர் சேர்க்கை நடக்கும் என பல்கலை. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் கூறியதாவது:
கடந்தமுறை ஒவ்வொரு துறையிலும் 5-வது பருவத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்தது. இம்முறை 70 முதல் 80 சதவீத மதிப்பெண் எடுத்த பலருக்கு அறிவியல் துறைகளில் இடம் கிடைக்கவில்லை. கலந்தாய்வு நடத்தியதால் நுழை வுத்தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர் வில் எடுத்த மதிப்பெண், இறுதிப் பட்டியலை இணையத்தில் வெளி யிடவில்லை. இந்நிலையில், இப்பல்கலையில் முதுகலை பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்ததாகவும், நுழைவுத் தேர்வு பட்டியலை ஆன்லைனில் வெளிப்படையாக நிர்வாகம் வெளியிடவில்லை எனவும் மதிமுக பொதுச்செயலர் வைகோ குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரிக்கவேண்டும். தகுதியானவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக காமராசர் பல்கலை துணைவேந்தர் எம். கிருஷ்ணன் கூறியது:
கடந்த காலங்களில் அந்தந்த துறை களில் முதுநிலை வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. சேர்க்கை முடிந்தபின், நிர்வாகம் ஒப்புதல் அளிக்கும். ஆனால், இம்முறை அண்ணா பல்கலை.யில் நடப்பது போன்று, ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 40 மாணவர்கள் சேர்க்கப்படும் சூழலில் 80 பேருக்கு கடிதம் அனுப்பி கலந்தாய்வுக்கு வரவழைத்தோம்.
இன சுழற்சியில் ரேங்க் அடிப்படையில் பெற்றோர் முன்னிலையில் திரையில் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படியே சேர்க்கை நடந்தது. ஆங்கிலம், கணிதம், வேதியியல், இயற்பியல், எம்பிஏ, எம்.காம், பயோ டெக்னாலஜி உள்ளிட்ட சில அறிவியல் துறைகள் தவிர, கலைப் பிரிவுகளில் இன்னும் காலியிடங்கள் உள்ளன. கலைப் பிரிவில் போதிய விண்ணப்பம் வராத சூழலில் சில துறைகளுக்கு உடனடி (ஸ்பாட் அட்மிஷன்) சேர்க்கை நடந்தது. ஆகஸ்டு 31 வரை நடக்கிறது.
மேற்கண்ட அறிவியல் பாடப்பி ரிவுகளில் 40 இடங்களுக்கு மாணவர்கள் 500 பேர் வரை விண் ணப்பித்துள்ளனர். இன சுழற்சி முறையில் மட்டுமே வெளிப்படையாக கலந்தாய்வில் சேர்க்கை நடந்தது. தவறு நடக்க வாய்ப்பே இல்லை. அரசு வழிகாட்டுதலின்படி ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடந்தது. ரேங்க் அடிப்படையில் விரும்பிய பாடங்களில் சேர்ந்துள்ளனர். ரேங்க் பட்டியல் இணையத்தில் பதிவு செய்வது வழக்கத்தில் இல்லை.
இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT