Published : 26 Sep 2014 08:27 AM
Last Updated : 26 Sep 2014 08:27 AM
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி யராக இருந்த பாஸ்கரனின் மாற்றத்துக்கு, வருவாய்த் துறையினருடன் ஏற்பட்ட பனிப்போரே காரணம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ள பாஸ்கரன், கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சிய ராக பொறுப்பேற்றார். மாவட்ட ஆட்சியராக இவர் பொறுப்பேற் றதில் இருந்தே, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடையே மோதல் சூழ்நிலை இருந்து வந்ததாக கூறப் படுகிறது. மேலும், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அலுவலர்கள் சங்கத்தில், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறை அதிகாரிகளை பணியின்போது செய்த தவறுகள் காரணமாக ஒருமையில் திட்டியதாகவும், அதனால் வருவாய்த்துறையில் உள்ள சில மூத்த அதிகாரிகளுக்கும் பாஸ்கரனுக்கும் பனிப்போர் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதியின் வேட்புமனு பரிசீல னையின் முடிவுகள் நள்ளிரவு வரை வெளியிடப்படாமல் இருந்தது. இதற்கு, வருவாய்த் துறையின் மூத்த அதிகாரி ஒருவருக் கும், பாஸ்கரனுக்கும் ஏற்பட்ட பனிப் போரே காரணம் என அரசுத்துறை வட்டாரங்களில் கூறப்பட்டன.
மேலும், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், குறைகளை தெரிவிக்கும் விவசாயிகளை ஒருமை யில் பேசுவதாக, பாஸ்கரனுக்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் முதல்வரின் தனிப்பிரி வுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது.
அணுமின் நிலைய விவகாரம்
திருக்கழுக்குன்றம் ஒன்றியத் துக்கு உட்பட்ட நல்லாத்தூரில் உள்ள பாலாற்றில், கல்பாக்கம் அணுமின் நிலைய குடியி ருப்புக்கு தேவைப்படும் குடி நீரைப் பெற, ராட்சத ஆழ் துளை கிணறுகள் அமைக்கும் பணி களை அணுமின் நிலைய நிர்வாகம் தொடங்கியது.
ஆனால், நல்லாத்தூர் கிராமத் தில் குடிநீர் பெறுவதற்காக, அணுமின் நிலைய நிர்வாகம் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளன. மேலும், கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால், ராட்சத ஆழ்துளை கிணறு அமைக்க அப்பகுதியில் வசிக்கும் தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கரனிடம் இதுகுறித்து கிராம மக்கள் மனு அளித்தனர். ஆனால், பாஸ்கரன் கிராம மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளவே இல்லை. கல்பாக் கம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தால், அனை வரையும் கைது செய்யுமாறு கூறி நல்லாத்தூரில் ஏராளமான போலீ ஸாரை குவித்ததாகவும் கூறப் படுகிறது. ஊராட்சி தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி முடியும் வரை சட்ராஸ் காவல் நிலையத்தில் பல மணி நேரம் சிறை வைக்கப்பட்டதால் பதற் றம் ஏற்பட்டது. இதுபோன்ற பல்வேறு புகார்கள் முதல்வரின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப் பட்டதன் எதிரொலியாகவே காஞ்சி புரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்த பாஸ்கரன் மாற்றப் பட்டுள்ளதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT