Last Updated : 22 Mar, 2018 04:52 PM

 

Published : 22 Mar 2018 04:52 PM
Last Updated : 22 Mar 2018 04:52 PM

எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்கள் பதிப்புரிமையை அமெரிக்க நிறுவனம் வாங்குகிறது

 

தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் நாவல்களான ‘ஒன் பார்ட் வுமென்’, ‘பூநாச்சி’, ‘தி ஸ்டோரி ஆப் பிளாக் கோட்’ ‘ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள வாசகர்கள் படிக்கப் போகிறார்கள்.

இந்த நாவல்களின் பதிப்புரிமையை, அமெரிக்காவைச் சேர்ந்த குரோவ், அட்லாண்டிக் நிறுவனம் பெற்றுள்ளது. காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன் சுந்தரம், குரோவ் அட்லாண்டிக் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜெர்மன், செக், பிரான்ஸ் மொழியில் ‘ஒன் பார்ட் உமென்’ நாவலும், கொரியன் மொழியில் ‘பூனாச்சி’ நாவலும் மொழிபெயர்க்கப்படுகிறது.

இது குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறுகையில், ''இப்படிப்பட்ட ஒரு வசதி செய்யப்பட்டதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டநிலையிலும் கூட, இன்னும் போதுமான அளவில் நம்முடைய பாரம்பரியத்தை, பெருமையை உணர்த்தும் நூல்களை மொழிமாற்றம் செய்யவில்லை. குறிப்பாக ஆங்கிலத்தில் நவீன இலக்கியத்தில் மொழிபெயர்க்கவில்லை. இது தொடங்கிவிட்டது'' எனத் தெரிவித்தார்.

கண்ணன் சுந்தரம் தரப்பில் லோட்டஸ் லேன் லிட்டரரின் பிரியா துரைசாமி என்பவர்தான் அமெரிக்க நிறுவனத்துடன் பேசி ஒப்பந்தத்தை முடித்துள்ளார். குறிப்பாக மாதொருபாகனின் ஆங்கிலப் பதிப்பான ஒன் பார்ட் உமென் நாவல் இந்தியாவில் ஒரு லட்சம் புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.

இது குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன் சுந்தரம் கூறுகையில், ''அமெரிக்க ஆங்கிலத்துக்கு ஏற்றார்போல், இந்த இரு புத்தகங்களிலும் இரு முக்கிய மாற்றங்கள் செய்ய மொழிமாற்றம் செய்பவர்களுடன் ஆலோசிக்கப்படும். ஏராளமான ஐரோப்பிய பதிப்பகத்தார்கள் எங்களுடன் பேசி வருகின்றனர்'' எனத் தெரிவித்தார்.

தமிழில் வெளியாகி சர்ச்சைக்குள்ளான ‘மாதொருபாகன்’ நாலை ஆங்கிலத்தில் அனிருதன் வாசுதேவன் பென்குயின் பதிப்பகத்துக்காக மொழிமாற்றம் செய்துள்ளார். ‘பூநாச்சி’ நாவலை என் கல்யாண ராமன் வெஸ்ட்லாண்ட் அமேசான் நிறுவனத்துக்காக மொழிமாற்றம் செய்தார்.

அமெரிக்காவின் குரோவ் அட்லாண்டிக் நிறுவனத்தின் மூத்த ஆசிரியர் பீட்டர் பிளாக்ஸ்டாக் கூறுகையில், ''பெருமாள் முருகனின் நாவலைப் பதிப்பிக்க ஆர்வமாக இருக்கிறேன். தமிழகத்தில் நிலவும் சாதி, அடையாளங்கள், திருமணம், குடும்பம் ஆகியவற்றை மிகுந்த நகைச்சுவையுடனும், உயிர்ப்புடனும் நாவலில் கூறியுள்ளார்'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x