Published : 03 Apr 2014 12:00 AM
Last Updated : 03 Apr 2014 12:00 AM

கொல்லங்கோடு கோயிலில் குழந்தைகள் தூக்க நேர்ச்சை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா கடந்த 24-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை புதன்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு புதன் கிழமை அதிகாலை 4 மணியளவில் தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளினார். பின்னர் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை தொடங்கியது.

தூக்க ரதம் ஒவ்வொரு முறை கோயிலை சுற்றி வரும்போதும், 4 குழந்தைகள் வீதம் தூக்க நேர்ச்சை நடைபெற்றது. முதலில் 4 அம்மன் தூக்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 1,498 குழந்தைகளின் நேர்ச்சை தூக்கம், 44 ரிசர்வ் தூக்கம் என மொத்தம் 1,546 தூக்க நேர்ச்சை நடைபெற்றது. தூக்க ரதம் கோயிலை 387 முறை வலம் வந்தது. தமிழகம், கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம், நெய்யாற் றங்கரை, பாறசாலை, களியக்கா விளை, குளச்சல், மார்த்தாண்டம், தக்கலை பகுதிகளில் இருந்து கொல்லங்கோட்டுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. குளச்சல் ஏ.எஸ்.பி. கங்காதர் தலைமையில் தக்கலை டி.எஸ்.பி மோகன்தாஸ் மற்றும் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x