Published : 07 Mar 2018 05:58 PM
Last Updated : 07 Mar 2018 05:58 PM
ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி இன்று காலை தொடங்கிய நிலையில் மாலை வரையில் 9 ஆயிரம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர்.
புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவ்விடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 3ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது.
எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் ( www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. தொடக்க நாளில் மாலை வரையிலேயே 9 ஆயிரம் பேருக்கு மேல் விண்ணப்பித்துள்ளனர். வரும் ஏப்ரல் 13 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமுள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மருக்கு 150 இடங்களும், காரைக்கால் ஜிப்மருக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இம்முறை 2 லட்சத்து 45 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என்று ஜிப்மர் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT