Published : 01 Mar 2018 11:10 AM
Last Updated : 01 Mar 2018 11:10 AM
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சங்கரமடத்தின் 69வது பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள். இவர் உடல்நலக்குறைவால் நேற்று 28.2.18 அன்று காலை 9 மணிக்கு மரணமடைந்தார். இன்று 1.3.18 குருவாரம் எனப்படும் வியாழக்கிழமையில், அவரின் உடல் சங்கரமடம் பிருந்தாவனத்தில், வேத கோஷங்கள் முழங்க, நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரின் உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினார்கள். பிரதமர் மோடி, ராகுல்காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தி.க.தலைவர் கி.வீரமணி உட்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ஜெயேந்திரரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
அவரின் உடலுக்கு நேற்று இரவும் கூட ஏராளமானோர் மரியாதை செலுத்தி, அஞ்சலி செலுத்தி வந்தார்கள். இன்று காலையிலேயே உடல் நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும் வேத கோஷங்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. அதையடுத்து இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது ஜெயேந்திரரின் உடலுக்கு அபிஷேகங்களும் அலங்காரங்களும் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வின் போது, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முதலானோர் கலந்துகொண்டனர்.
பிறகு சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில், ஜெயேந்திரரின் உடல், வேதகோஷங்களுக்கு நடுவே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜாதி இன பேதமின்றி ஏராளமான அன்பர்கள், இந்தச் சடங்கில் கலந்துகொண்டு, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தார்கள்.
மாசி மக நன்னாள் இன்று. பெளர்ணமியும் கூட. இந்த நன்னாளில், காஞ்சி ஜெயேந்திரரின் உடலானது பிருந்தாவனத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருப்பதைச் சொல்லி நெகிழ்ந்தனர் பக்தர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT