Published : 08 Mar 2018 11:02 AM
Last Updated : 08 Mar 2018 11:02 AM

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி: தெலங்கானா முதல்வரின் அரசியல் வியூகம்

காங்கிரஸ், பாஜக அல்லாத பிற மாநில அரசியல் கட்சிகளை இணைத்து மத்தியில் கூட்டாட்சி அமைத்து, மாநிலத்தில் சுயாட்சியை நிலை நிறுத்தும் வகையில் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் திட்டமிட்டு வருகிறார்.

இந்தக் கூட்டணியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டில் காங்கிரஸ், பாஜக அல்லாத வகையில் மத்தியில் கூட்டாட்சி அமைக்க தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக வரும் ஏப்ரல் 27ம் தேதி, தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி உதயமான நாளன்று நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து அவர் முக்கியமான அறிக்கையை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2019ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்க தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் முன்னிலை வகித்து வருகிறார்.

இந்தக் கூட்டணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், ஏஐஎம் ஐஎம் கட்சி தலைவர் அசாத்துதீன் ஓவைசி உட்பட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.மேலும், இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்பார் எனக் கூறப்படுகிறது.

மேலும், இக்கூட்டணியில் பல கட்சித் தலைவர்கள் இணைவார்கள் எனவும் கூறப்படுகிறது. ஆதலால், வரும் ஏப்ரல் 27-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் விழா இந்திய அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x