Published : 11 Sep 2014 11:06 AM
Last Updated : 11 Sep 2014 11:06 AM

மணமகனை சுமந்து செல்ல வந்த யானை மீட்பு: இ-மெயிலில் வந்த புகாரால் நடவடிக்கை

சென்னையில் நடைபெற்ற மண விழாவில் மணமகனை சுமந்து செல்ல வந்த யானையை விலங்கு கள் துயர் துடைப்புக் கழக அதிகாரி கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமையன்று திருமணம் நடக்க இருந்தது. அந்த திருமண மண்டபத்தின் தரை தளத்தில் ஒரு யானை கட்டப்பட்டிருந்தது. அதற்கு போதிய வசதிகள் செய்யப் படவில்லை எனக் கூறப்படுகிறது. அதை அந்தவழியாகச் சென்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் வேப்பேரி யில் உள்ள விலங்குகள் துயர் துடைப்பு கழகத்துக்கு, இ-மெயில் மூலம், அவர்கள் புகார் செய்தனர்.

இதையடுத்து துயர்துடைப்பு கழக கவுரவ செயலாளர் தியாகராஜன், தலைமை ஆய் வாளர் தவுலத்கான் மற்றும் ஆய்வா ளர் சீனிவாசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அந்த யானை திருச்சியில் இருந்து வாகனம் மூலம் புதன்கிழமை காலை அழைத்து வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அது தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தபோது அதில் சில விதிமீறல் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து யானை மீட்கப்பட்டு வேப்பேரியில் உள்ள துயர் துடைப்புக்கழக அலுவல கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் தியாகராஜன் கூறியதாவது:

திருச்சியை சேர்ந்த அந்த பெண் யானையின் பெயர் ராணி. இதுபோன்ற விலங்குகளை வாகனத்தில் கொண்டு வருவதற் கான உரிய ஆவணத்தினை அவர்கள் வைத்திருந்தார்கள். அந்த யானையின் உரிமையாளருக்கான உரிமத்தினையும் பாகன் சுரேஷ் வைத்திருந்தார். அதற்குண்டான மருத்துவச் சான்றிதழையும் வைத்தி ருந்தார்கள். ஆனால், மாப்பிள்ளை அழைப்புக்குத் தேவையான ‘பெர்பார்மன்ஸ்’ உரிமத்தினை அவர்கள் வைத்திருக்கவில்லை. அதை சென்னையில் உள்ள அகில இந்திய வன உயிரின நிறுவனத்திடமிருந்து அவர்கள் முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டி யது அவசியம். அது அவர்களிடத் தில் இல்லை. அதனால் பாகன் சுரேஷ் கைது செய்யப்பட்டார். யானை ராணி மீட்கப்பட்டது. வியாழக்கிழமை காலை, அதை மாஜிஸ்திரேட்டு (தென்சென்னை) முன்னிலையில் ஆஜர்படுத் துவோம். அவர் விசாரித்தபிறகு, அடுத்து என்ன செய்வது என்பது பற்றி முடிவெடுக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x