Last Updated : 26 Mar, 2018 01:34 PM

 

Published : 26 Mar 2018 01:34 PM
Last Updated : 26 Mar 2018 01:34 PM

நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் காரணமாக 3 நாட்களுக்கு பதில் 3 மணி நேரத்தில் முடிந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம்

புதுச்சேரி சட்டப்பேரவை மூன்று நாட்கள் நடைபெறுவதாக இருந்த சூழல் நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் காரணமாக 3 மணி நேரத்திலேயே முடிவடைந்தது.

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2 ஆயிரத்து 468 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். மேலும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், பாஜக நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் மேல் முறையீடு செய்வது உள்ளிட்ட இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதுச்சேரி மாநிலத்தின் பதினான்காவது சட்டப்பேரவையின் 3-வது கூட்டத்தொடர் காலை 9.30 மணியளவில் தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரை நிகழ்த்தினார். ஆளுநர் உரையைத் தொடர்ந்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல்வர் நாராயணசாமி ஏப்ரல், மே, ஜுன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கு அரசின் செலவினங்களுக்காக 2468 கோடி ரூபாய்க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தெரியாமல் புதுச்சேரி பேரவைக்கு பாஜகவை சேர்ந்த 3 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மத்திய உள்துறை அமைச்சகம் நியமித்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாஜக நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் காரணமாக 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 மணி நேரத்தில நிறைவுபெற்றது. பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம் பேரவையை காலவரையரையின்றி ஒத்தி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x