Published : 23 Mar 2018 09:46 AM
Last Updated : 23 Mar 2018 09:46 AM
இயற்கைப் பேரிடர் மற்றும் காலநிலை முன்னறிவிப்பை அறிந்து, மக்களும் அரசும் செயல்பட்டால் காலநிலைப் பேரிடர் அழிவைக் குறைக்க முடியும் என்று இந்திய வானிலை மைய முன்னாள் இயக்குநர் டி.ஆர்.சிவராமகிருஷ்ணன் கூறினார்.
இன்று வானிலை தினம்
உலக வானிலை தினம் இன்று (மார்ச் 23) கடைபிடிக்கப்படுகிறது. 1950-ல் இதே நாளில்தான் ஐ.நா. அமைப் பின் ஓர் அங்கமாக உலக வானிலை நிறுவனம் (World Meteorological Organisation) ஆரம்பிக்கப்பட்டது.
இயற்கைப் பேரிடர்கள் காலம் காலமாக நடந்தாலும், தற்போது தாக்கம் அதிகமாக வெளிப்படுவது ஏன்? பெருகும் மக்கள்தொகை, கடலோரப் பகுதியில் குடியேற்றம், தொழில் வளர்ச்சி, கூடுதல் நகர்ப்புறங்களால் கிராமப்புற அழிவு, காடுகள், தோட்டங்கள் போன்ற பசுமைகளை அழித்தல் ஆகியவையே முக்கிய காரணங் கள்.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் முனைவர் டி.ஆர்.சிவராமகிருஷ்ணன், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
காலநிலை மாற்றத்தில் ‘புவிவெப்பமாதல்’ முக்கிய பங்கு வகிக்கிறது. புவியின் வளிமண்டலத்தில், 1901-ம் ஆண்டுமுதல் கணக்கிட்டால், மிக அதிக வெப்பநிலை நிலவிய முதல் 12 ஆண்டுகள், இந்த நூற்றாண்டில்தான், அதா வது 2000 முதல் 2017-க்குள் வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய வானிலைத் துறை அளவுகளின்படி இந்தியா வில் மிக வெப்பமான ஆண்டு 2016. இதற்கு அடுத்து 2009, 2010 2015, 2017 ஆண்டுகள் வருகின்றன. இந்த வெப்பத்தின் தாக் கம் உணவு உற்பத்தி மற்றும் மக்கள் வாழ்க்கை நிலையில் பிரதிபலிக்கிறது.
சமீபகாலமாக குளோரோ ஃப்ளூரோ கார்பன் வளிமண்டலத்தை மாசுபடுத்துவது குறைக்கப்பட்டு, ஓசோன் நிழல் படலத்துளைக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. உரிய சட்டங்கள் இயற்றி தொழிற்சாலைகள், கந்தக மற்றும் இதர நச்சுப்பொருட்களை வளிமண்டலத்தில் கலப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கு பதில் மின்சக்தி, சூரியசக்தி போன்ற மாற்று எரிபொருள் வாகனங்கள் வரத்தொடங்கின.
அடுத்து இயற்கைப்பேரி டர் பற்றிய காலநிலை மற் றும் வானிலை முன்னறிவிப்பிலும் ஐ.நா. சபை கவனம் செலுத்தி வருகிறது. ராடார், செயற்கைக் கோள் நுண்ணறி கருவி போன்ற தொலை உணர்வு சாதனங்களால் இயற்கைப் பேரிடர்களைத் தொடர்ந்து கண்காணித்தலிலும், அதன் வருங்காலப் போக்கினை உணர்த லும் இன்று சாத்தியமாகிறது.
புவியின் வெப்பமாதல் தொடர்ந்தால் துருவப்பிர தேச பனி உருகி, கடல் நீர்மட்டம் உயரும். இதனால் கடலோர தாழ்வான நிலப் பகுதிகள் மூழ்கும். இதைத் தவிர்க்க துருவ மண்டல கண்காணிப்பு தேவை. இதைச் செயற்கைக் கோள்கள் செய்கின்றன.
எனவே, பூமியின் பசுமைப் போர்வையைப் பாதுகாப் பதோடு, காற்று மாசுபடாமல் பாதுகாப்பது அவசியம். இயற்கைப் பேரிடர் மற்றும் காலநிலை முன்னறிவிப்பை தக்க முறையில் அறிந்து, மக்களும் அரசும் செயல்பட்டால் காலநிலைப் பேரிடர் அழிவை குறைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT