Published : 14 Sep 2014 12:43 PM
Last Updated : 14 Sep 2014 12:43 PM

கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு - பாக். உளவாளி வாக்குமூலம் எதிரொலி: இலங்கை சென்று விசாரிக்க என்ஐஏ முடிவு

தமிழகத்தில் 20 இடங்களில் தாக்கு தல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டதாக பாகிஸ்தான் உளவாளி அளித்த தகவலை யடுத்து, கல்பாக்கம் அணுமின் நிலையம் உட்பட கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப் பின் உளவாளியாக செயல்பட்டு வந்த அருண் செல்வராஜன் (28), கடந்த புதன்கிழமை இரவு சென்னையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குழுவினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. மும்பையில் நடத்தியதுபோல தமிழகத்திலும் கடல்வழியாக ஊடுருவி 20 இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டி இருப்பது தெரியவந்தது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற இலங்கையில் உள்ள சிலரை மூளைச்சலவை செய்து சதித் திட்டத்தை அரங்கேற்றும் முயற்சி யில் அருண் செல்வராஜன் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. அவரது பேஸ்புக் பக்கத்தில் உள்ள புகைப்படங்கள் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையின் முக்கிய இடங் களை புகைப்படம் எடுத்து அவற்றை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் அருண் செல்வராஜன் அனுப்பியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக இலங்கைக்கு சென்று விசாரணை நடத்த புலனாய்வு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதற்காக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அருண் செல்வ ராஜன் அளித்த தகவல்களையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்கு தல் நடத்த திட்டமிட்டுள்ளது தெரியவந்ததால் தமிழக கடலோர பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலைய பகுதியில் கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மத்திய கடலோர காவல் படை, கமாண்டோ பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் 24 மணி நேர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடலோர பகுதிகளில் தீவிர வாகன சோதனையும் நடத்தப் படுகிறது. கடற்கரை கிராமங் கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கடலோர பாது காப்புப்படை வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுமட்டு மின்றி முக்கிய வழிபாட்டுத் தலங்கள், வர்த்தகப் பகுதிகளிலும் போலீஸார் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x