Published : 04 May 2019 12:00 AM
Last Updated : 04 May 2019 12:00 AM
விளைநிலங்களை ரசாயனத்தின் பிடியில் இருந்து மீட்க ஆட்டுக் கிடை அமைக்கும் தொழிலில் பல தலைமுறையாய் தேனி பகு தியைச் சேர்ந்த குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன.
அதிக விளைச்சல், குறு கிய காலத்திலேயே பலன் போன்ற எதிர்பார்ப்புகளினால் விவசாயத் தில் ரசாயனம் நுழையத் தொடங்கியது. உரம், பூச்சி மருந்து, விதைநேர்த்தி போன்ற பல்வேறு மட்டங்களிலும் இதன் தாக்கம் அதிகரித்து விட்டது. இதனால் இன்றைக்கு மண் முதல் விளைபொருள் வரை ரசாயனத்தின் தாக்கம் மிகுந்து காணப்படுகிறது. இருப்பினும் இயற்கை விவசாயத்தின் மீதான ஆர்வமும் தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காக விளைநிலங்களின் தன்மையை மாற்றுவதில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தேனி, அல்லிநகரம், சின்னமனூர் உள் ளிட்ட மாவட்டத்தின் பல பகுதி களில் ஆட்டுக்கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர். இதற்காக செம்மறி ஆடுகளை வயல்களில் கிடை போட்டு இரவு முழுவதும் தங்க வைக்கின்றனர். அடுத்த நாள் அதே நிலத்தின் வேறு பகுதிக்கு இந்த கிடை மாற்றப்படுகிறது. இதனால், செம்மறி ஆடுகளின் கோமியம், புழுக்கை போன்றவை மண்ணுக்குள் சென்று இயற்கை உரமாகிறது. இவற்றை அப்படியே உழுவதன் மூலம் நிலத்தின் தன்மை வளமாகிறது.
தற்போது அல்லி நகரம் வீரப்ப அய்யனார் கோயில் பகுதியில் பல தோப்புகளில் ஆட்டுக்கிடை அதிகளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதி யில் தற்காலிகமாக தங்கி உள்ளன.
இது குறித்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், எங்களுக்கு ராமநாதபுரம் மாவட் டம் பூர்வீகம். இங்கு இரண்டு தலைமுறைக்கு முன்பே வந்து தங்கிவிட்டோம். ஒவ்வொரு குடும்பத்திலும் 300 முதல் 600 ஆடுகள் வரை உள்ளன. இது எங்களுக்கு குலத்தொழில். பல தலைமுறையாக இதைத்தான் செய்து வருகிறோம். ஆட்டுக்கிடை அமைக்க விரும்பும் விவசாயிகளின் நிலத்தில் ஆடுகளைப் பட்டிபோட்டு அடைப்போம். இரவு முழுவதும் இதற்குள்ளே இருக்கும். தடுப்பு அமைக்காவிட்டால் செம்மறி ஆடு கள் படுக்காமல் எழுந்து சென்று கொண்டே இருக்கும்.
எனவே, வலை அமைத்தி ருக்கிறோம். கோமியம், புழுக்கைக்கு ஈடான இயற்கை உரம் இல்லை. இவற்றை உழுவத னால் நிலவளம் மேம்படும். ஒரு நாளைக்கு ரூ.600 வாங்குகிறோம். ஒரு நிலத்தில் இருக்கும் போதே அடுத்த நிலத்திற்கான அழைப்பு வந்து விடுவதால் ஒவ்வொரு பகுதியாக சென்று கொண்டிருக் கிறோம் என்றனர்.
இது குறித்து ஆட்டுக் கிடை உரிமையாளர் வினோத்குமார் கூறுகையில், பகலில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விடுவோம். இருட்டியதும் இதில் அடைத்து விடுவோம். ஆட்டு வாடைக்கு பாம்பு வராது. ஆடுகளின் மேல் உள்ள உண்ணிகளை காகம், கொக்குகள் கொத்தித் தின்பதால் ஆடுகளுக்குப் பாதிப்பு இல்லை. இந்த ஆடுகளை இறைச்சிக்காக வளர்க்க மாட்டோம். கிடை போடவே வைத்துள்ளோம். வய சான, பிறந்த கிடா குட்டிகளை மட்டும் விற்று விடுவோம். ஒவ்வொரு தோப்பிலும் 10 நாட்கள் வரை இருப்போம். மாட்டுக்கிடை தற்போது குறைந்துவிட்டது. இத னால் எங்கள் தொழில் நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது. இரவில் ஆட்டுக்கு காவலாக ஒருவர் டார்ச்லைட், தடியுடன் படுத்திருப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT