Published : 31 May 2019 12:00 AM
Last Updated : 31 May 2019 12:00 AM
கடலின் எந்தப் பகுதியில் மீன் கள் உள்ளன என்பது குறித்து அறிந்துகொள்ள உதவும் வகையில் தமிழக அரசு அறி முகப்படுத்தியுள்ள 'தூண்டில் ஆன்ட்ராய்டு செயலி' மீனவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகபட்டினம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர் ஆகிய 13 கிழக்கு கடற்கரை மாவட்டங்கள் உள்ளன.
இதில் 15 ஆயிரத்துக்கும் மேற் பட்ட விசைப்படகுகள் 50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய கட்டுமரங்கள், பாய்மரப்படகுகள், துடுப்புப் படகுகள் உள்ளன. இந்நிலையில், 15.01.2018-ல் மீனவர்களுக்குப் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக ஆன்ட்ராய்ட் செயலியை தமிழக அரசு தூண்டில் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது.
இந்தத் தூண்டில் ஆன்ட்ராய்ட் செயலி குறித்து ராமநாதபுரம் மீன்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தூண்டில் ஆன்ட்ராய்டு செயலியை Thoondill என ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஆன்ட்ராய்ட் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது https://play.google.com/store/apps/details?id=com.coastal.dss.thoondil என்ற இணையதள முகவரியில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழி களில் இயங்கக்கூடியது. திசை காட்டி, வானிலை, மீன் மண்டலங் கள், தினசரி பயணங்கள் என் குழு (மை டீம்), என் படகுகள் (மை போட்ஸ்), நேரடி காட்சி, கடந்த பாதைகள், மீட்பு திட்டம் ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டது இந்த தூண்டில் செயலி.
திசைகாட்டி பகுதி, படகு இருக் கும் அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகையைத் துல்லியமாகக் காட்டும். வானிலை பகுதியில் வெப்பநிலை, மழையளவு, காற்றின் ஈரப்பதம், சூரிய உதயம், சூரிய மறைவு, சந்திரன் உதயம், சந்தி ரன் மறைவு ஆகியன உள்ளன. இந்த உள்ளடக்கங்களைப் பதிவு செய்யப்பட்ட படகின் உரிமை யாளர் மற்றும் படகு இயக்கு பவர் ஆகியோர் மட்டுமே பார்வையிட முதற்கட்டமாக வசதி செய்யப்பட்டுள்ளது. செயலியில் பதிவு செய்தோ ருக்கு மீன்கள் கிடைக்க வாய்ப் புள்ள பகுதிகள், கடல்நிலை முன்னறிவிப்பு, பேரிடர் எச்சரிக்கை, வானிலை முன்னறிவிப்பு, அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் ஒருசேர ஆன்ட் ராய்ட் மொபைல் போனில் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.
ராமேசுவரத்தில் தூண்டில் ஆன்ட்ராய்டு செயலியை பயன் படுத்தும் மீனவர் முருகன் கூறியதாவது,
தூண்டில் செயலி, கடலில் எந்தப் பகுதியில் மீன்கள் கிடைக் கும் என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்ள உதவுகிறது. ராமேசுவரம், பாம்பன், மண் டபம் மீனவர்களுக்குக் கடல் எல்லை குறுகியது என்பதால் எல்லை தாண்டாமல் இருக்க திசைகாட்டியாகவும் பயன்படு கிறது. ஆனால், இந்த செயலி அனைத்துத் தரப்பு மீனவர்களையும் சென்றடைய வேண்டும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT