Published : 11 May 2019 12:00 AM
Last Updated : 11 May 2019 12:00 AM
மதுரை நகரில் சாலையோரங்களில் அனுமதியின்றி வைக்கப்படும் பெட்டிக்கடைகள் அதிகரித் துள்ளன. அகற்றச் செல்லும் அதி காரிகளை அரசியல் கட்சியினர் மிரட்டி வருகின்றனர்.
மதுரை நகரில் காலத்துக்கு ஏற்ப போதுமான மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் நடக்காததால் குறுகலான சாலையிலேயே மக்கள் பயணிக்க வேண்டி உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் நிரந்தரமானதாகி விட்டது. மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில், வணிக நிறுவனங்கள் ‘பார்க்கிங்’ வசதி இல்லாமல் செயல்படுகின்றன. சில நிறுவனங்கள் மட்டுமே வாகன நிறுத்துமிடங்களை வைத்துள்ளன. இதனால் பொருட்கள் வாங்க வரும் மக்கள், வேலைக்கு வரும் ஊழியர்கள் சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர்.
பார்க்கிங் வசதியின்றி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் வரிந்து கட்டி நிற்கின்றனர். அதனால், மாநகராட்சி அதிகாரிகள், சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் பார்க்கிங் வசதி செய்ய நெருக்கடி கொடுக் கவோ, நடவடிக்கை எடுக்கவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
வணிக நிறுவனங்கள் ஒரு புறம் சாலைகளை பார்க்கிங்காக பயன்படுத்தும் நிலையில், மற்றொருபுறம் அரசியல் கட்சியினர் சாலைகளை ஆக்கிர மித்து அனுமதியில்லாமல் பெட்டிக்கடை என்ற போர்வையில் நடைபாதை உணவகம், பூக்கடை, பழக்கடை நடத்துகின்றனர். அதோடு அவர்கள் அருகில் உள்ள காலியிடங்களையும் ஆக்கிரமித்து மற்றவர்களுக்கு வாடகைக்கு விடுகின்றனர்.
மாநகராட்சிப் பகுதியில் சாலையோரங்களில் மொத்தம் 5,250 பெட்டிக் கடைகள் செயல் பட்டன. இதில், முறைகேடா கவும், புதுப்பிக்காமலும் செயல் பட்ட 750 கடைகளின் அனுமதியை நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி ரத்து செய்து அவற்றை அகற்றின.
தற்போது 4,500 பெட்டிக் கடைகள் செயல்படுகின்றன. இதில், ஏராளமான பெட்டிக்கடைகள் அனுமதியின்றி செயல்படுகின்றன. அவர்கள் மீது மாநகராட்சி அதி காரிகள் நடவடிக்கை எடுக்கவோ, அகற்றவோசென்றால் அவர்கள் ஆளும்கட்சியினர் துணையுடன் மிரட்டுகின்றனர். அதையும் மீறி அப்புறப்படுத்த நெருக்கடிகொடுத்தால் சம்பந் தப்பட்ட அதிகாரிகளை ஏதாவது ஒரு வகையில் முடக்க குற்றச்சாட்டுகளைப் புனைந்து, அவர்கள் மீது புகார் அளிக்கின்றனர்.
அரசியல் கட்சியினரின் இந்த மிரட்டலால் பெட்டிக்கடைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். அத னால், நகரச் சாலைகளில் ஆக்கிரமிப்புகளும், போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளன. பெட்டிக்கடைகள் புற்றீசல் போல் அதிகரித்துள்ளன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பெட்டிக் கடைகளுக்கு மாநகராட்சி தற்போது அனுமதி வழங்குவதில்லை. 2017-ம் ஆண்டுக்கு முன் வரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பரிந்துரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோரங்களில் பெட்டிக் கடைகள் வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
குறைதீர் கூட்டத்தில் மனு கொடுக்கும் மாற்றுத்திறனாளி களுக்கு பெட்டிக்கடை வைக்க மாவட்ட ஆட்சியர் நெடுஞ்சாலைத் துறைக்குப் பரிந்துரை செய்வார். அதுபோல் ஆளும்கட்சியினர் கைகாட்டும் நபர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் பெட்டிக் கடை வைக்க அனுமதி வழங்கும். பெட்டிக்கடைக்கு அனுமதி பெறுவோர் ரூ.5,000 காப்புத்தொகை செலுத்திவிட்டு அனுமதிக்கும் இடங்களில் கடை வைத்துக்கொள்ளலாம். அந்தப் பெட்டிக்கடை 8-க்கு 6 அல்லது 8-க்கு 8 அடி அளவிலேயே இருக்க வேண்டும். ஆனால், அனுமதி பெறுவோர் பெயரளவுக்கு பெட்டிக்கடைகளை வைத்துவிட்டு, அதன் முன்பும், பின்பும், சுற்றியுள்ள இடங்களையும் ஆக்கிரமித்து சாலைகளை உள் வாடகைக்கே விடுகின்றனர். இவர்களில் பலர் போலிச் சான்றிதழ்களைத் தயார் செய்து பெட்டிக்கடை வைத்துள்ளனர். பலர் அனுமதியைப் புதுப்பிக்காமல் பெட்டிக்கடைகளைத் தொடர்ந்து நடத்துகின்றனர்.
மாநகராட்சியோ, நெடுஞ் சாலைத்துறையோ பெட்டிக் கடைகளுக்கு அனுமதி வழங்கினாலும், அவர்கள் மாத வாடகையை மாநகராட்சிக் குதான் செலுத்த வேண்டும். ஆனால், அவர்கள் அதையும் செலுத்துவதில்லை.
குறைந்தபட்சமாக நிர்ண யிக்கும் ரூ.1500 வாடகையைச் செலுத்தாமல் அவர்கள் அந்த பெட்டிக்கடையையும், அதனைச் சுற்றியுள்ள இடங் களையும் வாடகைக்கு விடுவது எந்த விதத்தில் நியாயம், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கின்றனர். உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கின்றனர். அதற்காக நடவடிக்கை எடுக்கச் சென்றால் எங்கள் மீது புகார் அளித்து மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர், என்றனர். போலீஸ் அதிகாரிகள் துணையுடன் இவற்றை அகற்ற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT