Published : 06 May 2019 11:28 AM
Last Updated : 06 May 2019 11:28 AM
இன்று சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக, அதிமுக அதிருப்தி எம்எல்ஏ பிரபு தெரிவித்துள்ளார்.
அதிமுக அதிருப்தி எம்எல்ஏக்களான விருத்தாசலம் கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகிய மூவருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து மூவரில் பிரபு தவிர்த்து மற்ற இருவரும், சபாநாயகரின் நோட்டீஸுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி பிரபு மட்டும் நீதிமன்றத்தை அணுகாமல் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கப் போவதாக கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, 'இந்து தமிழ் திசை'யிடம் பேசிய பிரபு, "நான் அதிமுகவில் தான் தொடர்ந்து இருக்கிறேன். அமமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை, அந்தக் கட்சியின் உறுப்பினராகவும் இல்லை. இந்த சூழ்நிலையில் அதிமுக அரசு கொறடா என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதை பின்பற்றியே செயல்படுவேன்.
அதிமுக அரசுக்கு எதிராக நான் எப்போதும் செயல்பட்டதில்லை. இப்போதும் அதிமுகவினருடன் தொடர்ந்து இருந்து வருகிறேன். நான் சசிகலா அணியில் உள்ளேன். தினகரன் தொடர்பில் இருந்து விலகி இருக்கிறேன். தற்போது சபாநாயகர் நோட்டீஸ் விளக்கம் அளிக்கும் வகையில் இன்று சபாநாயகரை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளேன்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT