Published : 31 May 2019 12:00 AM
Last Updated : 31 May 2019 12:00 AM
கிணறுகள் கைவிட்ட நிலையில் விளைநிலங்களில் தார்பாலின் பரப்பி நீர் தேக்குதல், பிரம்மாண் டமான மேல்நிலைத் தொட்டிகளை கட்டி நீர் தேக்கி வைத்தும் விவசா யிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு, வைகை ஆறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்டவற்றால் தேனி மாவட்டத்தின் தென்பகுதி வளமாக இருந்தாலும் மேட்டுப்பாங்கான வடக்கு, மேற்கு பகுதிகளில் நீர்வளம் குறைவாகவே உள்ளது. இதனால் விவசாயிகள் நிலத்தடி நீரையே சார்ந்து இருக்க வேண்டிய நிலை இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை மழை நீர், ஆங்காங்கே அமைக்கப்பட்ட சிறு நீர்தேக்கங்கள் ஆகியவற்றால் கிணற்றில் ஊற்றெடுத்து பாசனத்துக்குப் போதிய தண்ணீர் கிடைத்தது. தற்போது நீராதாரங்கள் வற்றிய நிலையில் நிலத்தடி நீரும் வெகுவாய் குறைந்துவிட்டது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பல பகுதிகள் வறண்டுள்ளன. குறிப்பாக ஊஞ்சாம்பட்டி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
முழுபரப்பில் நடை பெற்ற விவசாயம் தற்போது பகுதியாக குறைந்து விட்டது. இருக்கும் நிலங்களுக்கான நீர் தேவையைப் பூர்த்தி செய்வது விவசாயிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளது. இங்குள்ள கிணறுகள் நீரின்றி பாழடைந்துள்ளதால் நீருக்கான மாற்று வழிகளைத் தேடும் முயற் சியில் இப்பகுதி விவசாயிகள் ஈடு பட்டுள்ளனர்.
இதற்காக நிலத்தில் ஆங்காங்கே ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீர் பெறுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் பள்ளம் அமைத்து அதில் தார்ப்பாலின் விரித்து நீரை சேமிக்கின்றனர். இந்த நீரை குழாய் மூலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல் உயர்நிலை கிணறுகளையும் அதிகளவில் உருவாக்கி வருகின்றனர். இதற் காக நிலத்தில் இருந்து 20, 25 அடி உயரத்துக்கு கிணறுபோல கட்டமைப்பை ஏற்படுத்துகின்றனர். பல்வேறு ஆழ்குழாய்களில் இருந்து பெறப்படும் நீரை இதில் சேமிக்கின்றனர். அழுத்தம் அதிகம் இருப்பதால் இதன் கீழ்புறத்தில் உள்ள குழாயைத் திறக்கும்போது மோட்டார் இழுவிசை எதுவும் இன்றி நீர் பெருக்கெடுத்து வெளி யேறுகிறது.
இது குறித்து விவசாயி விக் னேஷ் கூறியதாவது:கிணற்றுப் பாசனம் மூலம் விவசாயம் பார்த்தநிலை மாறி விட்டது. மழை பெய்யும்போது மட்டும் ஊற்று இருக்கும். மற்ற நேரங்களில் விவசாயம் செய்ய பண்ணைக்குட்டை மற்றும் ரவுண்ட் மோல்டு எனப்படும் மேல்நிலை தொட்டிகளைக் கட்டியுள்ளோம். ஆழ்குழாய்களில் இருந்து பெறப்படும் நீரை இதில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறோம். இதற்கான செலவு அதிகமாக இருந்தாலும் தண்ணீருக்காக இது போன்ற ஏற்பாடுகளை செய் வதைத்தவிர வேறு வழி தெரிய வில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT