Published : 08 Sep 2014 11:51 AM
Last Updated : 08 Sep 2014 11:51 AM
செட்டிநாட்டு அரசர் குடும்பத்து வாரிசுகளில் ஒருவரும் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியாரின் அண்ணனுமான குமாரராஜ முத்தையா செட்டியாரின் பிறந்த நாள் நினைவு பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை எம்.ஏ.எம்.ராமசாமி உள்ளிட்ட செட்டியார் சமூகத்து வி.ஐ.பி-க்கள் புறக்கணித்துள்ளனர்.
செட்டிநாட்டு அரசர் குடும்பத் தில் எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியா ருக்கும் அவரது வளர்ப்பு மகன் ஐயப்பன் என்ற முத்தையாவுக்கும் மனச் சங்கடங்கள் ஏற்பட்டு தொடர் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி, சென்னையில், ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் குமாரராஜா முத்தையா செட்டியாரின் 86-வது பிறந்த நாள் நினைவுப் பரிசளிப்பு விழா நடந்தது.
ராணி சீதை மன்றத்தில் நடந்த இந்த விழாவை முத்தையா செட்டி யாரின் மனைவி குமாரராணி மீனா முத்தையா, முத்தையா செட்டியாரின் தம்பி எம்.ஏ.எம். ராமசாமி உள்ளிட்டவர்களும் செட்டியார் சமூகத்து வி.ஐ.பி-க்களில் பெரும்பகுதியினரும் புறக்கணித் துள்ளனர்.
இதுகுறித்து செட்டிநாடு அரண் மனை வட்டாரத்தை நன்கு அறிந்த வி.ஐ.பி-க்கள் ‘தி இந்து’விடம் பேசுகையில், ‘ஆகஸ்ட் 5 ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள், செப்டம்பர் 6 அவரது புதல்வர் குமாரராஜா முத்தையா செட்டியார் பிறந்த நாள், செப்டம்பர் 30 ராஜா சர் முத்தையா செட்டியாரின் தந்தை, ராஜா சர் அண்ணாமலை செட்டியார் பிறந்த நாள், அக்டோபர் 11 ராணி லேடி மெய்யம்மை ஆச்சி பிறந்த நாள், அக்டோபர் 11 எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் மனைவி சிகப்பி ஆச்சி பிறந்த நாள்.
இந்த பிறந்த நாட்கள் அனைத்தையும் விழாக்களாக கொண்டாடி வருகிறது செட்டிநாட்டு அரசர் குடும்பம். இந்த நாட்களில் அரசர் குடும்பத்து வி.ஐ.பி-க்களில் முக்கியமானவர்கள் கலந்துகொள்வர். அத்தனை விழாக் களிலும் நடுநாயகமாக அமர்ந்திருப் பார் எம்.ஏ.எம்.ராமசாமி. ஆனால், 6-ம் தேதி நடந்த குமாரராஜா முத்தையா செட்டியார் பிறந்த நாள் பரிசளிப்பு விழா வழக்கத்துக்கு மாறாக நடந்து முடிந்தது. ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளைதான் இந்த விழாக்களை நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளையின் தலைவ ராக எம்.ஏ.எம்-மின் வளர்ப்பு மகன் முத்தையாதான் உள்ளார். முத்தையா செட்டியார் பிறந்த நாள் விழா நினைவு பரிசளிப்பு விழாவில் அவரது மனைவி குமாரராணி மீனா முத்தையா முன்வரிசையில் அமர்ந்திருப்பார். தனது கணவரைப் பற்றி மற்ற வர்கள் நினைவுகூரும்போது அதை கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருப்பார்.
ஆனால், எம்.ஏ.எம்-மின் வளர்ப்பு மகன் முத்தையா இந்த அறக்கட்டளைக்கு தலைவராக வந்த பிறகு, மீனா முத்தையா இந்த விழாவுக்கு வருவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார். தனது அண்ணன் முத்தையா செட்டியார் மீது அளவுக் கடந்த பாசம் கொண்டவர் எம்.ஏ.எம்.ராமசாமி. அண்ணனின் உருவம் பொறித்த மோதிரத்தைத்தான் இன்னமும் அவர் தனது விரலில் அணிந்திருக்கிறார். அண்ணனால் தான் தனக்கு இவ்வளவு பேரும் புகழும் கிடைத்தது என்பதால் அவரது பிறந்த நாள் விழாக்களை ஒருபோதும் அவர் புறக்கணித்தது இல்லை.
ஆனால், இந்த ஆண்டு அதுவும் நடந்திருக்கிறது. அரண்மனைக்குள் நடக்கும் குடும்பச் சண்டையின் தாக்கத்தால் ரொம்பவே மனம் ஒடிந்து போயிருக்கும் எம்.ஏ.எம்.ராமசாமி, அந்த மன வருத்தத்தில் அண்ணனின் பிறந்த நாள் விழா நினைவு பரிசளிப்பு விழாவுக்கு வராமல் வீட்டிலேயே இருந்துவிட்டார். விழாவில் அவரது வளர்ப்பு மகன் முத்தையா பங்கேற்றதே முக்கிய காரணம். இருப்பினும் உடல்நிலை சரியில்லாததால் அவர் வரமுடியவில்லை என்று சொல்லப்படுவது ஏற்புடைய காரணம் அல்ல.
அவர் இப்படியொரு மன ஓட்டத்தில் இருக்கிறார் என்பதால் செட்டியார் சமூகத்தின் பிற வி.ஐ.பி-க்களும் இந்த விழாவை புறக்கணித்து விட்டனர். இதனால், பரிசுபெற்ற பாலகுருகுலம் பள்ளிக் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் அரங்கத்தில் அமர வைத்து சமாளித்துள்ளனர்’’என்று கூறினர்.
இதனிடையே, விழா நடந்த அதே நாளில் எம்.ஏ.எம்.ராமசாமியை செட்டிநாட்டு வி.ஐ.பி-க்கள் சிலர் சந்தித்துப் பேசியதாகவும் மிக விரைவில் எம்.ஏ.எம். தரப்புப் பங்காளிகள் இளையாற்றங்குடியில் கூட்டம் போட்டு பேச இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT