Published : 10 May 2019 02:17 PM
Last Updated : 10 May 2019 02:17 PM
கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் பலர் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள், நிவாரணம் கேட்டு போராடினர். அப்போது அவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தி 140-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக தங்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது, எனவே வழக்கை விசரிக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரித்த நீதிபதி இளந்திரையன் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்திய 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT