Last Updated : 25 May, 2019 12:00 AM

 

Published : 25 May 2019 12:00 AM
Last Updated : 25 May 2019 12:00 AM

மதுரை மக்களவைத் தொகுதியில் 24 சுற்றுகளிலும் முன்னிலை பெற்ற மார்க்சிஸ்ட்: தொடர்ந்து பின்னடைவை சந்தித்த அதிமுக

மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அனைத்து சுற்று களிலும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் தொடர்ந்து முன் னிலை வகித்தார். அதிமுக வேட்பாளர் தொடக்கம் முதல் கடைசி வரை பின் னடைவை சந்தித்தார்.

மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. மகன் ராஜ்சத்யன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன், அமமுக சார்பில் டேவிட் அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யம் சார்பில் அழகர், நாம் தமிழர் சார்பில் பாண்டியம்மாள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 27 பேர் போட்டியிட்டனர். இவர்களில் சு.வெங்கடேசன் 1,39,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர், 24 சுற்று எண் ணிக்கையிலும் பெற்ற வாக்குகள் அடிப்படையில் மேலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 54,946, மதுரை கிழக்கில் 97,859, மதுரை வடக்குத் தொகுதியில் 70,866, தெற்கு தொகுதியில் 51,618, மத்தியில் 72,010, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொகுதியான மதுரை மேற்கில் 82,022 வாக்குகள் பெற்று இருக்கிறார். குறிப்பாக திமுக எம்எல்ஏ பி. மூர்த்தியின் தொகுதியான மதுரை கிழக்கிலும், அடுத்த நிலையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொகுதியிலும் அதிகமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன. அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு அதிகபட்சமாக மதுரை கிழக்கு தொகுதியில் 63,059 வாக்குகளும், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொகுதியில் 55,208, மேலூரில் 54,946, அதிமுக எம்எல்ஏ சரவணன் தொகுதியில் 51,195, ராஜன் செல்லப்பா தொகுதியில் 41,958 வாக்குகளும், மத்திய தொகுதியில் 40,667 ஓட்டுகளும் பெற்றிருக்கிறார். செல்லூர் கே.ராஜூ தொகுதியை விட, ராஜன் செல்லப்பா தொகுதியில் குறைவான வாக்குகளே அவர் பெற்றிருக்கிறார்.

அமமுக வேட்பாளர் டேவிட் அண் ணாதுரை மேலூரில் 31,278, கிழக்கில் 20,353, வடக்கில் 8,410, தெற்கில் 7,871, மத்தியில் 6,926, மேற்கில் 10,480 வாக் குகள் பெற்றுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அழகர் மேலூரில் 1,958, கிழக்கில் 14,698, வடக்கில் 14,885, தெற்கில் 18,461, மத்தியில் 16,563, மேற்கில் 18,277 வாக் குகள் பெற்றுள்ளார்.

நாம் தமிழர் வேட்பாளர் பாண்டியம் மாள் மேலூரில் 5,003, கிழக்கில் 9,998, வடக்கில், 7,204, தெற்கில் 5,629, மத்தியில் 5,052, மேற்கில் 8,835 வாக்குகள் பெற்றார்.

தபால் வாக்குகளை பொறுத்தவரை சு.வெங்கடேசனுக்கு அதிகபட்சமாக 2,923 ஓட்டுகளும், ராஜ்சத்யனுக்கு 647 ஓட்டுகளும் கிடைத்திருந்தன.

தொடர்ந்து முன்னிலை

மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் கடைசி சுற்று வரை தொடர்ந்து சு.வெங்கடேசன் முன்னிலை வகித்தார். ராஜ்சத்யன் ஒரு சுற்றில் கூட முன்னிலை வகிக்கவில்லை. மற்ற தொகுதிகளில் பிரதான போட்டியாளர்களிடையே ஒவ் வொரு சுற்றிலும் மாறி, மாறி முன் னிலை நிலவரம் காணப்பட்ட நிலையில், மதுரையில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே மாதிரியான நிலவரம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் 23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக் கப்பட்டிருந்தது. ஆனால், 24 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது. இறுதியில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை சு.வெங்கடேசனிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்.நாகராஜன் வழங் கினார்.23 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 24 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நீடித்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x