Published : 22 May 2019 12:00 AM
Last Updated : 22 May 2019 12:00 AM

மதுரை விமானநிலையத்தை வேடிக்கை பார்த்தாலே குற்றம்: மதுரை காவல்துறையின் விநோத அறிவிப்பு

புல்வாமா தாக்குதலுக்குப் பின் மதுரை விமானநிலையத்தை எட்டிப்பார்த்தால், வேடிக்கை பார்த் தால் குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல்துறை விநோத அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் ஏரா ளமான ஆன்மிக சுற்றுலா தல ங்கள், கோடை சுற்றுலா தலங்கள், கடற்கரை மற்றும் கலாச்சாரம் பண்பாடு ரீதியிலான இடங்கள் உள்ளன. இந்த இடங்களைச் சுற்றிப் பார்க்க வெளிநாடு, உள்நாடுகளைச் சேர்ந் தவர்கள் மதுரை விமானநிலையம் வந்து செல்கின்றனர். அதனால், மதுரை விமான நிலையம், உள்நாட்டு விமானப் போக்குவரத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.

தற்போது மதுரை விமான நிலையத்தை விரிவாக்கி சர்வதேச விமான நிலையமாக்கும் ஆயத்தப் பணிகள் நடக்கின்றன. மண்டேலா நகரில் அமைந்துள்ள மதுரை விமானநிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, கொழும்பு, சிங்கப்பூர் மற்றும் துபாய் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு விமானங்கள் சென்று வருகின்றன. அதனால், விமானங்கள் நாளொன்றுக்கு 35 முறைக்கு மேல் தரையிறங்குவதும், மேலெழும்புவதுமாக (டேக் ஆஃப்) இருக்கும்.

விமானங்கள் தரையிறங்கு வதையும், மேலே எழும்புவதையும் வேடிக்கை பார்க்க விமானநி லையத்தையொட்டி ரிங் ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். மதுரை விமா னநிலையத்துக்கு கடந்த காலத்தில் இரண்டடுக்குப் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. சமீபத்தில் புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு மதுரை விமானநிலையத்துக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டடுக்கில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மூன்றாவது அடுக்கில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அ தனால், தற்போது ரிங் ரோட்டில் செல்வோர் வாகனங்களை நிறுத்திவிட்டோ அல்லது ரோட்டில் நின்றோ விமானங்களை வேடிக்கை பார்க்கவோ, விமான நிலையத்தை எட்டிப் பார்க்கவோ கூடாது என்றும் அப்படிச் செய் தால் அது குற்றச்செயலாகக் கருதப்படும் என்றும் மதுரை காவல்துறை விநோத எச்சரிக்கை விடுத்துள்ளது.

காவல்துறையினர் கூறுகை யில், ‘‘ரிங்ரோட்டில் செல்வோர், ஆர்வ மிகுதியால் விமானங்களை பார்த்ததும் கூச்சலிடுகிறார்கள். வேடிக்கை பார்க்கிறார்கள். இன்னும் பலர், விமானநிலைய காம்பவுண்ட் சுவர் அருகே சென்று எட்டிப் பார்க்கிறார்கள். ரிங் ரோட்டை ஓட்டியே ஓடுதளம் அமைந்துள்ளது. ரோட்டுக்கு சிறிது தூரம் முன்பே விமானங்கள் டேக் ஆஃப் ஆகின்றன. பாதுகாப்புக் காரணங்களுக்காகவே ரிங் ரோட்டில் யாரும் நின்று விமானநிலையத்தை எட்டிப் பார்க்கக் கூடாது, கூடி நின்று வேடிக்கை பார்க்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. அதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x