Last Updated : 29 May, 2019 12:00 AM

 

Published : 29 May 2019 12:00 AM
Last Updated : 29 May 2019 12:00 AM

கலவரங்களை தடுக்க, பொதுமக்களை கண்காணிக்க உளவு பிரிவு போலீஸாருக்கு புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம்

உளவுப்பிரிவின் ஒரு பகுதியானநுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கென புதிய மென்பொருள் உருவாக்கப்பட உள்ளது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு எடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மக்களோடு மக்களாக கலந்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை நுண்ணறிவு பிரிவு போலீஸார் கண்காணித்து வருகின்றனர். நேரடியாகச் சென்றும், பிறநபர்கள் (சோர்ஸ்) மூலமும், இணையதளம் மூலமும் சந்தேகத்துக்குரிய நபர்கள் பற்றிய தகவல்களை உன்னிப்பாக சேகரிக்கின் றனர்.

இந்த தகவல்களை தங்களதுஉயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்கின்றனர். அதன்படி சட்டம் ஒழுங்கு போலீஸார் அடுத்த கட்ட நடவடிக்கையாக கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதன் மூலம் குற்ற நிகழ்வுகள் கட்டுப் படுத்தப்படுகின்றன. வந்த பின்னர் கட்டுப்படுத்துவதை விட வரும் முன் காப்பதே சிறந்தது என்ற அடிப்படையில் நுண்ணறிவு பிரிவு போலீஸாரின் கண்காணிப்பு பணி நடைபெறுவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலத்துக்கு ஏற்ற வகையில் கண்காணிப்பை மேம்படுத்தும் வகையில் நுண்ணறிவு பிரிவு போலீஸாருக்கு பயன்படும் வகையில் புது மென்பொருள் விரைவில் உருவாக்கப்பட உள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிஜிபி அலுவல கத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “பொதுமக்கள்அதிகம் கூடும் இடங்களில் கலவரங்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நுண்ணறிவு பிரிவு போலீஸார் மூலம் கூட்டம் கூடுவதை அறிந்து அதனை கண்காணிக்கும் விதமாக மென் பொருள் ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. இந்திய தகவல் தொழில் நுட்ப கழகம் மூலம் ரூ.1 கோடியே 32 லட்சம் செலவில் இதை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பணிதொடங்கியுள்ளன. புது மென்பொருள் எப்படி இருக்கும் என இப்போது கூற இயலாது. இறுதி வடிவம் பெற்ற பின்னரே தெரிவிக்க இயலும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x