Published : 07 May 2019 12:00 AM
Last Updated : 07 May 2019 12:00 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்பு றங்களில் தண்ணீர் பிரச்சினை ஓரளவு சரிசெய்யப்பட்ட போதும் கிராமப்புறங்களில் குடிநீர் பிரச் சினை அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் கிராம மக்கள் சுகாதாரமற்ற நீரைக் குடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அணைகளில் மிகவும் குறைந்த அளவே நீர் உள்ளது. இந்நிலையில் கண்மாய், குளங்கள் வறண்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட நகர்ப் புறங்களில் தண்ணீர் பிரச்சினை அணைகளில் தேங்கியுள்ள தண்ணீர் மூலம் ஓரளவு தீர்க்கப் பட்டாலும், கிராமப்புறங்களின் நிலை பரிதாபமாக உள்ளது. பெரும்பாலான கிராமங்களில் நீர் ஆதாரங்கள், கிராமத்துக்கு அருகில் உள்ள குளங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து தண்ணீர் விநியோகம் நடைபெற்று வருகிறது.
கடும் வறட்சி காரணமாக, ஆழ் துளைக் கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததால், போதுமான நீரை கிராம மக்களுக்கு விநியோகிக்க முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.
தேர்தல் விதிமுறைகள் நடை முறையில் உள்ளதால் அவசரத் தீர்வாக குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாவட்ட நிர்வாகம் உள்ளது. இதனால் கிராமமக்கள் தண்ணீர்ப் பிரச்சினையால் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வக்கம்பட்டி ஊராட்சியில் முறையாகக் குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலையில், ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக் கல் மாநகராட்சிக்குக் கொண்டு செல்லப்படும் தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கசியும் நீரை கிராம மக்கள் பிடித்துச் செல்கின்றனர். சுடுகாட்டுக்கு அருகே பள்ளத்தில் தேங்கி மண்ணில் கலந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ள நீரைப் பயன்படுத்துவதால் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
திண்டுக்கல் - தேனி சாலையில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் செல்லும் குழாயில் கசியும் நீரை வழியோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பிடித்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து வக்கம்பட்டி கிராம மக்கள் கூறியதாவது: ஊராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் ஆதாரங்களை முறையாகப் பராமரிக்கவில்லை. இதனால் குடிநீர்ப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய்கள் மூலம் வழியோரக் கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதுவும் நிறுத்தப்பட்டு விட்டது. கிராமத்தின் குடிநீர் ஆதாரமும் வற்றிவிட்டதால் கசிவு நீரை பிடிக்கவேண்டிய நிலைக்கு மக்கள் ஆளாகி உள்ளனர்.
முன்பு இருந்ததுபோல், ஆத் தூர் நீர்த்தேக்கத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு கொண்டு செல்லும் நீரில் குறிப்பிட்ட அளவை கிராம மக்க ளுக்கு விநியோகிக்க மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT