Published : 08 May 2019 12:00 AM
Last Updated : 08 May 2019 12:00 AM
அழகான நீண்ட கடற்கரை, அவ்வப்போது கரையை மோதி திரும்பும் அலைகள், அமைதியான சூழல் என ராமநாதபு ரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற் கரையின் பக்கம் சுற்றுலாப் பயணிகளின் பார்வை திரும்பி உள்ளது. ஆனால், இங்கு கழிவறை, மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
சாயல்குடி அருகே அமைந் துள்ளது மூக்கையூர் கடற்கரை கிராமம். சாயல்குடி நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள இந்த மீனவக் கிராமத்தில்தான் மணற்பரப்புடன் கூடிய நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. இதன் அழகை அறிந்த சுற்றுவட்டார மக்கள் அவ்வப்போது இங்கு வந்து செல்கின்றனர். சனி, ஞாயிறு மற்றும் கோடை விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களும் இங்கு வந்து கடலில் ஆனந்தமாக குளித்து விட்டுச் செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அரிய மான் கடற்கரை, ராமேசு வரத்தில் சங்குமால் கடற்கரை, தனுஷ்கோடி, முகுந்தராயர் சத் திரம், அரிச்சல்முனை ஆகிய கடற்கரைகள்தான் சுற்றுலா பய ணிகள் வழக்கமாக செல்லும் இடங்கள். இதில் அரியமான் கடற்கரையில் மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட மக்கள் ராமேசுவரம், மண்டபம் செல்ல அதிக தூரம் பயணிக்க வேண்டி உள்ளதால் மூக்கையூர் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். மேலும் கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந் துள்ளதால் கன்னியாகுமரி, தூத் துக்குடி, திருநெல்வேலி, வேளாங் கண்ணி, நாகூர் செல்லும் சுற்றுலா பயணிகளும் இங்கு வரு கின்றனர்.
இக்கடற்கரையில் தற்போது ஆழ்கடல் மீன்பிடி படகுகள் நிறுத்தும் மீன்பிடி இறங்குதளம் ரூ.113.90 கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப் பட்டுள்ளது. இக்கடற்கரையில் அவ்வப்போது படப்பிடிப்புகளும் நடந்து வருகிறது. இதனால் இக்கடற்கரையை சுற்றுலாத் தல மாக அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக் கள் கோரிக்கை விடுத்து வரு கின்றனர். ஆனால், இதுவரை அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. சாயல்குடி நகரில் இருந்து மூக்கையூர் கிராமத்துக்கு போதுமான பேருந்து வசதி மற்றும் அடிப்படை வசதிகளும் ஏற்படுத்த வில்லை.
இதுகுறித்து விருதுநகரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி குமார் கூறியதாவது: மூக்கையூரில் கடல் அழகை ரசிக்கவும், கடலில் குளிக் கவும் ஏராளமானோர் வருகின் றனர். ஆனால், இங்கு கழி வறை, உடை மாற்றும் அறை, மின்விளக்கு போன்ற வசதிகள் இல்லாததால் பெண்கள் சிரமப்படுகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக்க வேண்டும் என்றார். சுற்றுலா அலுவலர் ஒருவர் கூறியதாவது: மூக்கையூர் கடற் கரையை சுற்றுலாத் தல மாக்க ஏற்கெனவே ஆய்வு செய் யப்பட்டுள்ளது. இக்கடற்கரை அருகே உப்புத்தண்ணீ தீவு, நல்ல தண்ணீ தீவு, புலுவினி சல்லித்தீவு ஆகியவை அமைந்துள்ளன. இவை மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அருகிலுள்ள மீன்பிடி இறங்கு தளம் மீன்வளத்துறை கட்டுப் பாட்டில் உள்ளது. இந்த 2 துறைகளின் ஒப்புதல் கிடைத்து விட்டால், சுற்றுலாத் தலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப் படும். பின்னர் சுற்றுலாத் துறை மூலம் அனைத்து அடிப்படை வசதி களும் ஏற்படுத்தப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT