Published : 15 May 2019 12:00 AM
Last Updated : 15 May 2019 12:00 AM
கேரளாவிலிருந்து லாரி லாரி யாக தினமும் தமிழகத்துக்குக் கொண்டு வரப்படும் குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகள் சாலை யோரத்தில் கொட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது இனாம் கரிசல்குளம் கிராமம். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதானத் தொழில். இந்நிலையில், கேரளத்தி லிருந்து செங்கோட்டை வழியாக தமிழகத்துக்குள் வரும் லாரிகள் மூலம் அம்மாநிலத்தில் வெளியேற் றப்படும் குப்பைகள், மருத்துவக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவு கள் கொண்டு வரப்பட்டு இனாம் கரிசல்குளம் கிராமத்தில் சாலை யோரங்களில் கொட்டப்படுகின்றன.
இதுமட்டுமின்றி சட்டவிரோத மாக லாரிகளில் கொண்டுவரப்பட்டு கொட்டப்படும் குப்பைகளை இங்கு உள்ள சிலர், தரம் பிரித்து பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்து, அதை விற்பனை செய்கின்றனர். மற்ற குப்பைகள் குறிப்பாக மருத்துவக் கழிவுகளை சாலையோரத்திலும் அருகே கண்மாய்களில் கொட்டி எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி தருகிறது. பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு மற்றும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட் டுள்ளது.
நேற்றும் இதேபோன்று கேர ளாவில் இருந்து குப்பைகள் மற்றும் மருத்துவக் கழிவுகளை ஏற்றிவந்து சாலையோரத்தில் கொட்ட முயன்ற இரு லாரிகளை அப்பகுதி மக்கள் திரண்டுசென்று சிறைப்பிடித்தனர். அப்போது, லாரி ஓட்டுநர்கள் தப்பி யோடி விட்டனர். தகவலறிந்து வந்த வருவாய்த் துறையினர் லாரிகளைக் கைப்பற்றி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது: கடந்த 3 மாதங்களாக இரவு நேரங்களில் கேரளாவில் இருந்து வரும் லாரி களில் குப்பைகளையும் மருத் துவக் கழிவுகளையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் இங்கு வந்து கொட்டுகிறார்கள்.
அதோடு, அதை சாலையோர கண்மாய் பகுதியில் கொட்டி தீயிட்டு எரிக்கிறார்கள். இதனால், காற்று மாசுபடுவதோடு, நீர்நிலையும் பாதிக்கப்படைகிறது என்றனர்.
இதுகுறித்து, சுகாதாரத் துறை இணை இயக்குநர் மனோகரனிடம் கேட்டபோது, “விருதுநகர் மாவட் டத்தில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளிலும் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகள் முறையாக சேகரிக்கப்பட்டு தனியார் நிறு வனம் மூலம் பாதுகாப்பான முறை யில் அப்புறப்படுத்தப்பட்டு வரு கிறது. ஆனால், வெளி மாநில மருத்துவக் கழிவுகள் கொட்டப் படுவதை அனுமதிக்க முடியாது. இது சட்டப்படி குற்றம். சம்பந்தப் பட்டவர்கள் மீது சட்டரீதியான நட வடிக்கை எடுக்க காவல்துறைக்கு பரிந்துரைக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜனிடம் கேட்டபோது, “எந்த ஒரு குப்பை யையும் சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கக் கூடாது. கேரளா வில் இருந்து கொண்டு வரப்படும் குப்பைகளை எரிப்பதும், மருத் துவக் கழிவுகளை இங்கு வந்து கொட்டுவதும் ஆபத்தானது. இது குறித்து வருவாய்த்துறையினர் மூலம் புகார் அளிக்கப்படால் சம்பந் தப்பட்ட நபர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடம் கேட்ட போது, குப்பைகளை வெட்டவெளி யில் எரிப்பதால் பல தோற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. அதோடு, கேரள கழிவுகளையும் குப்பைகளையும் இங்கு கொண்டு வந்து கொட்டுவது சட்டப்படி குற்றம்.
இதுகுறித்து திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார “வளர்ச்சி அலுவலர்கள் மூலம் விசாரணை நடத்தப்படும். அதோடு, காவல்துறையில் புகார் அளித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் கண்காணிக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT