Published : 31 May 2019 12:00 AM
Last Updated : 31 May 2019 12:00 AM
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் மற்றும் கூடுதலாக டிப்ளமோ படித்து பணிபுரியும் மருத்துவர்கள் 830 பேரை இடமாற்றம் செய்ய மருத்துவக் கல்வி இயக்குநரகம் முடிவு செய்துள்ளது. காலிப் பணியிடங்களை அறிவிக்காமலேயே கவுன்சலிங்கில் கலந்துகொள்ளஅழைப்பு விடுத்துள்ளதால் மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சில்விதிமுறைகளை மேற்கோள் காட்டி, அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், அரசு மருத்துவர் பணியிடங்கள் மாற்றம் செய்யப்பட்டுஉள்ளன. ஏற்கெனவே நடந்த கவுன்சலிங்கில் 66 பேர் பேராசிரியர்களாவும், 150 பேர் இணைப் பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு அளித்து மற்ற மருத்துவக் கல்லூரிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மட்டும் அயல்பணி அடிப்படையில் அவர்கள் பணிபுரிந்த பழைய இடத்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், அடுத்தகட்டமாக மருத்துவக்கல்வி இயக்குநரகம், தற்போது உதவிப் பேராசிரியர்கள், கற்பிக்கும் ஆசிரியர்கள் (Tutor), மூத்த உறைவிட மருத்துவர்கள் 830 பேரை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. அதற்காக அவர்களுக்கு கவுன்சலிங் அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்களை காட்டாமல் 830 மருத்துவர்களை மே 30 முதல் ஜூன் 6 வரை நடக்கும் கவுன்சலிங்கில் கலந்துகொள்ள மருத்துவக்கல்வி இயக்குநரகம் அழைத்துள்ளது,அரசுடன் பேச்சுவார்த்தைமருத்துவக்கல்வி இயக்குநரகத்தின் இந்தச் செயல் மருத்துவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் சுகாதாரத் துறைச்செயலர், மருத்துவக் கல்வி இயக்குநரைச் சந்தித்து தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது: மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் மற்றும் கூடுதல் படிப்பாக டிப்ளமோ படித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவு, புறநோயாளிகள் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு, காச நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட சில மருத்துவப் பிரிவுகளில் பணிபுரிகின்றனர்.
இவர்கள் அதிகபட்சம் 20 ஆண்டுகள் முதல் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை பணிபுரிகின்றனர். இவர்களுக்குப் பதிலாகதற்போது புதிதாக பட்டமேற்படிப்பு முடித்தவர்களை நியமிக்க மருத்துவக் கல்வி இயக்குநரகம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எம்பிபிஎஸ், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் பணியிடம் வழங்கக்கூடாது என்று தொடக்கத்திலேயே சொன்னபோது, அதைப் பொருட்படுத்தாமல் அவர்களை நியமித்துவிட்டு இப்போது இவர்களை இடமாற்றம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
250 பணியிடங்கள்
மேலும், கவுன்சலிங்கில் 250 மருத்துவப் பணியிடங்களே காட்டவாய்ப்புள்ளது. அப்படியிருக்கும்போது 830 பேரை தேவையில்லாமல் கவுன்சலிங்குக்கு அழைத்து அவர்களை இடமாற்றம் செய்வது ஏற்புடையது அல்ல.
2010 வரை 3 முதல் 4 ஆண்டுகள் அரசு தேர்வாணையம் அரசு மருத்துவர்களை நியமனம்செய்தது. 2011-ம் ஆண்டுக்குப் பிறகு மருத்துவப் பணிகள் தேர்வாணையம் மூலம் அரசு மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கட்டுப்பாடில்லாமல் வரைமுறையின்றி எம்பிபிஎஸ், டிப்ளமோ முடித்தவர்களை பணிநியமனம் செய்தனர். அதனால், தற்போது பட்டமேற்படிப்பு முடித்தோர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால், இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிலமருத்துவப் பிரிவுகளில் எம்பிபிஎஸ், டிப்ளமா மருத்துவர்கள் பணிபுரியலாம். பட்டமேற்படிப்பு முடித்து நீண்ட காலம் பணிபுரியும் மருத்துவர்களை கவுன்சலிங் என்ற போர்வையில் இடமாற்றம் செய்ய உள்ளனர். சுகாதாரத்துறைச் செயலர், மருத்துவக்கல்வி இயக்குநரிடம் பேசியுள்ளோம். அவர்கள் அரசுத்தரப்பில் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறியுள்ளனர். அதன்பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT