Published : 11 May 2019 12:00 AM
Last Updated : 11 May 2019 12:00 AM

தூய்மை இந்தியா திட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி மன்னார்குடியில் பொது சுகாதாரம் மேம்படுத்தப்படுமா? பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

மன்னார்குடியில் பொது சுகாதா ரத்தை மேம்படுத்த வேண்டு மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார் குடி நகராட்சியின் தற்போதைய மக்கள்தொகை 70,000 பேர். மன்னார் குடி நகரம் முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், 18,714 வீடுகள் மற்றும் 4,106 வணிக கட்டிடங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.5 கோடி வரி வசூலிக்கப்படுகிறது. இதில், தூய்மை இந்தியா திட்டத்துக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

வீடுகள், கடைகள், பெரும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகளில் வசூலிக்கப்படும் வரியில் இருந்து, ரூ.20 முதல் ரூ.24 ஆயிரம் வரை தரம் பிரித்து, இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை முழுமையாகப் பயன் படுத்தி மன்னார்குடி நகரத்தின் சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மன்னார்குடி வர்த் தக பிரமுகர் ஷண்முகானந்தா பாரதி கூறியதாவது:மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறை நீண்ட நாட்களாக பூட்டப்பட்டுள்ளது. இதைப் புதுப்பிப்பதாகக் கூறி, தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணி களும் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. அதேபோல, நகரத்தில் 27 இடங்களில் உள்ள பொது சுகாதார வளாகங்கள் முறையான பராமரிப்பின்றியும், பெரும்பாலானவை பயன்பாடற்ற நிலையிலும் உள்ளன.

பந்தலடியில் பல்வேறு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயனுள்ள தாக இருந்து வந்த பொதுக் கழிப்பறை புதுப்பித்துக் கட்டுவ தற்காக மூடப்பட்டு 6 மாதங்க ளுக்கும் மேலாகிறது. ஆனால், அதற்கான கட்டுமானப் பணி இன்னும் தொடங்கப்படவே இல்லை. அதனால், பந்தலடியில் திறந்தவெளியில் அசுத்தப்படுத்தி வருகின்றனர்.

இதேபோல, வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகால் அமைப்புகளில் திறந்துவிடப்படுகின்றன. இந்தக் கழிவுநீர் சாக்கடையாக தேங்குவதால், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. எனவே, மன்னார்குடி நகரத்தின் பொது சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி வரிவிதிப்பில் உள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் நிதியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

இதுகுறித்து மன்னார்குடி நகராட்சி ஆணையர்(பொ) இளங்கோவன் கூறியதாவது:மன்னார்குடி பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பறை, நவீன முறையில் கழிவுநீர் வெளியேறும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிடும். இதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மன்னார்குடி நகராட்சிக்கு 3 இடங்களில் குப்பை தரம் பிரிக்கும் கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், குப்பையை கையாள்வதற்கு வாகனங்களும் புதிதாக வாங்கப்பட உள்ளன.

இந்த அடிப்படை பணிகள் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைந்த பின்னர், கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமித்து, மன்னார்குடி நகரம் முழுவதும் உள்ள பொது சுகாதாரத்தை சீரமைத்து மேம் படுத்தத் திட்டமிட்டுள்ளோம். பொது சுகாதாரம் தொடர்பான பொதுமக்களின் கோரிக்கைகள் விரைவில் நிவர்த்தியடையும்.

மேலும், மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள அடைப்புகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் தங்கள் பகுதியில் சாக்கடை தேங்குவதால் ஏற்படும் சுகாதார சீர்கேடு குறித்து நகராட்சியை அணுகி தகவல் தெரி வித்தால், அவற்றையும் சரிசெய்து தருவோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x