Published : 06 May 2019 12:00 AM
Last Updated : 06 May 2019 12:00 AM
ராமநாதபுரம் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் குடிநீர்ப் பிரச்சினையால் கிழக்குக் கடற் கரைச் சாலையில் காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாய்களில் பல மணி நேரம் காத்திருந்து மக்கள் குடிநீர் சேகரிக்கின்றனர்.
வறட்சி மாவட்டம் எனப் பெயர் பெற்ற ராமநாதபுரத்தில் குடிநீர்ப் பிரச்சினையை மட்டும் இதுவரை தீர்க்க முடியவில்லை. இம்மாவட்டத்தின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்க, 2009-ம் ஆண்டு திமுக அரசால் ரூ.616 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டம் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டதால், காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் ராட்சதக் குழாய்கள், குடியிருப்பு களுக்குச் செல்லும் குழாய்கள் பல இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ஏற் பட்ட வறட்சியால், காவிரி ஆற் றில் இருந்து வரும் தண்ணீரின் அளவு மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது. அதனால் பெரும்பாலான கிராமங்கள், குக்கிராமங்களுக்குத் தண்ணீர் செல்லாததால் மக்கள் தண் ணீருக்காக தவிக்கின்றனர். ஊருணிகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்கள் வறண்டுள்ளதால், மனிதர்களின் மற்ற தேவைகள், கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பது சிரமமாக உள்ளது.
ராமநாதபுரம் புறநகரில் இருந்து சாயல்குடி வரை கிழக்குக் கடற் கரைச் சாலையில் மக்கள் தண் ணீருக்காக அலைவதைத் தினமும் காண முடிகிறது. அப்பகுதியில் ஆங்காங்கே காவிரிக் குடிநீர் செல்லும் பிரதானக் குழாயில் உள்ள ஏர் வால்வு குழாய்கள், தண்ணீர் கசியும் இடங்களில் நூற்றுக்கணக்கான குடங்களுடன் மக்கள் நீண்டநேரம் காத்திருந்து குடிநீர் சேகரிக்கின்றனர். இரவு நேரங்களிலும் காத்திருந்து குடிநீர் எடுக்கின்றனர். ரூ.4000 மதிப்பில் தண்ணீர் எடுத்துச் செல்லும் தள்ளுவண்டிகளை ஒவ்வொரு வீட்டிலும் வாங்கி வைத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரைச் சாலையில் வாலிநோக்கம் விலக்கு சாலை அருகே காவிரி கூட்டுக்குடிநீர் வால்வு அமைந்துள்ள குழாயில் நேற்று 50-க்கும் மேற்பட்ட தள்ளு வண்டிகளுடன் ஏராளமான மக்கள் காத்திருந்து குடிநீர் எடுத்தனர். அங்கு தத்தங்குடி, கொத்தங்குளம், ஓடைக்குலம், பொட்டபச்சேரி, ஆய்க்குடி உள்ளிட்ட கிராம மக்கள் தண்ணீர் பிடித்தனர்.
தத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த காளியம்மாள்(50) கூறுகையில், எங்கள் கிராமத்தில் 10 ஆண்டுக ளாகக் குடிநீர் பிரச்சினை உள்ளது. காவிரி குடி நீரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒழுங்காக வரவில்லை. தேர்தல் நேரத் தில் வேட்பாளர்களிடமும், மற்ற நேரங்களில் அதிகாரிகளி டமும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி வலியுறுத்தினாலும் தீர்வு கிடைக்கவில்லை. தற்போது முடிந்த மக்களவைத் தேர்தலின் போது மட்டும் ஒரு வாரத்துக்கு முறையாகக் குடிநீர் விநியோகித் தனர் என்றார்.
தத்தங்குடியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முத்து முருகன் கூறும்போது, கிராம மக்கள் இரவு நேரங்களிலும் பல மணி நேரம் கிழக்குக் கடற் கரைச் சாலை யில் காத்திருந்து தண்ணீர் எடுக்கிறோம். தினமும் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. மேலும் ஒவ்வொரு கிராமத்தினரும் 2 கி.மீ. முதல் 5 கி.மீ. அலைந்து தண்ணீர் எடுக்கிறோம். கடந் தாண்டு அதிகாலையில் தண்ணீர் பிடித்துச் சென்ற 3 பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனர், என்றார்.
மாவட்டத்தில் மிகவும் வறட்சிப் பகுதியான கடலாடி, கமுதி, முதுகு ளத்தூர் வட்டங்களில் குடிநீர் பிரச்சினை அதிகம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் குடிநீர் பிரச் சினையைத் தீர்க்க உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT