Published : 19 Apr 2019 11:30 AM
Last Updated : 19 Apr 2019 11:30 AM
புதுச்சேரி, காரைக்காலில் தேர்ச்சி விகிதம் மொத்தமாக கடந்தாண்டை விட 5.62 சதவீதம் அதிகரித்து 92.94 சதமாகியுள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 11.86 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் தனி கல்வி வாரியம் கிடையாது. தமிழக அரசு பாடத்திட்டங்களையே புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் பின்பற்றுக்கின்றனர். வழக்கம் போல் இம்முறையும் காலதாமதமாகவே பிளஸ் 2 முடிவுகள் புதுச்சேரியில் வெளியானது. தேர்தல் நடப்பதால் இமெயிலில் முடிவுகளை தெரிவிப்போம் என்று கூறிவிட்டு தமிழகத்தில் வெளியாகி சுமார் ஒன்றரை மணிநேரத்துக்குப் பிறகு கல்வித்துறையின் மூலம் 11 மணிக்கே வெளியிட்டனர்.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி , காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 6,908 மாணவர்களும், 7,786 மாணவிகளும் மொத்தம் 14,694 பேர் எழுதினர். இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான தேர்வு முடிவுகளின் படி 13,657 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 6,236, மாணவிகள் 7,421 பேர். மொத்த தேர்ச்சி சதவீதம் 92.94. கடந்த ஆண்டை விட 5.62 சதவீதம் அதிகம். மாணவிகளே இம்முறையும் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக மாணவர்கள் 90.27 சதவீதமும், மாணவிகள் 95.31 சதவீதமும் வென்றனர்.
புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் 78.11 சதவீதமும், மாணவிகள் 90.97 சதவீதமும் வென்று மொத்தமாக 85.62 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 97.97 சதவீதமும், மாணவிகள் 99.36 சதவீதமும் வென்று மொத்தமாக 98.64 சதவீதமும் தேர்ச்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகரித்த தேர்ச்சி விகிதம்:
புதுச்சேரி, காரைக்காலில் 92.94 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விட 5.62 சதவீதம் அதிகம்.
அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் உயர்வு:
புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகளில் இம்முறை தேர்ச்சி விகிதம் 85.62 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 11.86 சதவீதம் அதிகம். புதுச்சேரி பிராந்தியத்தில் இம்முறை தேர்ச்சி சதவீதம் 86.03 சதவீதமாகியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.84 சதவீதமாகும். காரைக்காலில் இம்முறை தேர்ச்சி சதவீதம் 84.14 ஆகும். இது கடந்த ஆண்டை விட 8.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT