Last Updated : 14 Apr, 2019 05:36 PM

 

Published : 14 Apr 2019 05:36 PM
Last Updated : 14 Apr 2019 05:36 PM

பரிசோதனை அடிப்படையில் பார்வையற்ற வாக்காளர்களுக்கு புதுச்சேரியில் பிரெய்ல் வாக்காளர் அடையாள அட்டை

பரிசோதனை அடிப்படையில் பார்வையற்ற வாக்காளர்கள் 46 பேருக்கு பிரெய்ல் வாக்காளர் அடையாள அட்டை புதுச்சேரியில் தயாரித்து தரப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையமானது அனைவரும் அணுகும் வகையில் தேர்தல் அமைய வேண்டும் அறிவுறுத்தியதுடன் பார்வையற்றோருக்கு சில விதிகளோடு பிரெய்ல் அடையாளம் கொண்ட வாக்காளர் அடையாள அட்டையை இலவசமாக தர குறிப்பிட்டது.

இதையடுத்து, புதுச்சேரியில் பதிவாகியுள்ள 1,086 பார்வையற்ற வாக்காளர்களில் பரிசோதனை அடிப்படையில் 46 பேருக்கு பிரெய்ல் வாக்காளர் அடையாள அட்டையை புதுச்சேரி தேர்தல் அலுவலகம் தயாரித்தது. பிரெய்ல் புள்ளிகள் ஒளிபுகும் ஸ்டிக்கர்களில் (Transparent Stickers) அச்சடிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டையில் ஒட்டப்பட்டுள்ளது.

முன்பகுதியில் வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர், பிறந்த தேதி, வயது ஆகிய விவரங்கள் இருக்கிறது. பின்பகுதியில் வாக்குச்சாவடி எண், தொகுதி பெயர், எண் ஆகிய தகவல்கள் உள்ளன. பிரெய்ல் வாக்காளர் அடையாள அட்டைகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் வழங்கினார்.

இதையடுத்து அருண் கூறுகையில், "மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு தொகுதியில் 9 பேருக்கும், வில்லியனூர், மங்களம், உழவர்கரை தொகுதியில் 5 பேருக்கும், காலாப்பட்டு, லாஸ்பேட்டில் 10 பேருக்கும், உப்பளம், உருளையன்பேட்டை, முதலியார்பேட்டில் 20 பேருக்கும், நெல்லித்தோப்பு, அரியாங்குப்பம், மணவெளியில் 2 பேரும் என 46 பேருக்கு பிரெய்ல் வாக்காளர் அடையாள அட்டை தரப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் கஷ்டமின்றி வாக்களிக்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்தள வசதி, சக்கர நாற்காலிகள் போதியளவு உள்ளன. 422 வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு இரு மாணவ தன்னார்வலர் வீதம் 844 பேர் நியமிக்கப்பட உள்ளனர்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x