Last Updated : 04 Sep, 2014 11:24 AM

 

Published : 04 Sep 2014 11:24 AM
Last Updated : 04 Sep 2014 11:24 AM

தியாகி சங்கரலிங்கனார் மணி மண்டபம் விரைவில் திறப்பு: தமிழ்நாடு என்ற பெயரைப் பெற்றுத் தந்தவர்

தியாகி சங்கரலிங்கனாருக்கு, விருதுநகரில் ரூ. 1.6 கோடியில் மணி மண்டபம் விரைவில் திறக்கப் பட உள்ளது.

விருதுநகரை அடுத்த மண் மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தியாகி சங்கரலிங்கனார். சிறு வயதில் இருந்தே தமிழ்ப் பற்றும், நாட்டுப் பற்றும் மிக்கவர். இளமைப் பருவத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடு பட்டவர். பரமக்குடியில் இருந்த கதர் வாரியத்தில் பணியாற்றி வந்த அவர், பின்னர் ராஜாஜி தொடங்கிய காந்தி ஆசிரமத்தில் பணியாற்றினார். 1933-ல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு விருதுநகர் வந்தபோதும் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் சங்கரலிங்கனார்.

தமிழ் மொழியின் மீது தீராத பற்றுகொண்ட இவர், ‘சென்னை மாகாணம் என்ற பெயரைத் தமிழ் நாடு என்று மாற்ற வேண்டும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். நீதிமன்ற நிர்வாக மொழி யாகதமிழ்மொழிகொண்டுவரப்பட வேண்டும்’ என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளுக்காக 27.7.1957 அன்று தனது வீட்டில் உண் ணாவிரதம் தொடங்கினார். ஆனால், அப்போது இருந்த அரசு செவி சாய்க்கவில்லை.

உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோதும், தனது உண்ணா விரதத்தைச் சங்கரலிங்கனார் கைவிடவில்லை. தமிழுக்காகவும் தமிழ் மேல் கொண்ட தனது கொள் கைக்காகவும் தொடர் உண்ணா விரதம் இருந்த சங்கரலிங்கனார், 1957, அக்டோபர் மாதம் உண்ணா விரதத்தின் 76-வது நாளில் உயிரிழந் தார். அவர் எழுதி வைத்த உயிலின்படி, அவர் இறந்த பிறகு அவரது உடல் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கே.டி.கே.தங்க மணி, கே.டி. ஜானகியம்மாள் ஆகி யோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மதுரை தத்தனேரியில் தியாகி சங்கரலிங்கனாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு விருது நகரில் மணிமண்டபம் கட்ட தமிழக அரசு தீர்மானித்து, விருது நகர் ராமமூர்த்தி சாலை - கல்லூரி சாலைப் பகுதியில் சிறுவர் பூங்காவுக்கு அருகில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு பொதுப்பணித் துறை மூலம் ரூ. 1.6 கோடியில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. இந்த மாத இறுதியில், காணொளிக் காட்சி மூலம் தியாகி சங்கரலிங்கனாரின் மணிமண்டபத்தை முதல்வர் ஜெயலலிதா விரைவில் திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x