Published : 11 Apr 2019 11:35 AM
Last Updated : 11 Apr 2019 11:35 AM

திருப்பரங்குன்றம் தொகுதியில் சீட் பெற அதிமுக, திமுக.வில் கடும் போட்டி- தேர்தல் பணியில் திடீர் சுறுசுறுப்பு

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக, திமுக.வில் பலரும் வேட்பாளராக முயற்சிக்கின்றனர். இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளோர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திலும் திடீர் ஆர்வம் காட்டுவது கட்சியினரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் மே19-ல் நடக்கவுள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில் நேற்றே பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இக்கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர் விவி.ராஜன்செல்லப்பாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும். எனி னும் தொகுதிப் பொறுப்பாளர்களாக அமைச் சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்.

மக்களவைத் தேர்தலில் தனது மகனுக் கான செலவையே தாங்க முடியாமல் ராஜன்செல்லப்பா திணறுகிறார். இந் நிலையில், இடைத்தேர்தல் செலவை யும் அவர் ஏற்பது மிகக் கடினம் என் கின்றனர் அதிமுகவினர். இதனால் அனை வரும் ஏற்கும் வேட்பாளர்தான் தேர்வு செய்யப்படும் வாய்ப்புள்ளது.

வழக்கறிஞர் ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜன், முன்னாள் எம்எல்ஏ. முத்துராமலிங்கம், மாநில ஜெ. பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், ஒன்றியச் செயலாளர் நிலையூர் முருகன் உட்பட பலரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகக் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

திமுக சார்பில் கடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மருத்துவர் சரவணன், மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.மணிமாறன், மதுரை மாநகர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி, இவரது சகோதரர் போஸ் முத்தையா உட்பட 10-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். மணிமாறன் தன்னிடம் பணவசதி இல்லை எனத் தெரிவித்துவிட்டார். தேர்தல் செலவைத் தானே பார்த்துக்கொள்வதாகக் கூறும் சரவணனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே முன்னாள் மேயர் செ.ராமச்சந்திரனை வேட்பாளராக்கினால் வெற்றிவாய்ப்பு அதிகம் என்பதால் கட்சித் தலைமை அவரை அணுகியது. அவர் மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பி சீட் கேட்டார். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியதால் ராமச்சந்திரன் ஏமாற்றமடைந்து ஒதுங்கிக்கொண்டார். தற்போது, அவரை எப்படியாவது சரிக்கட்டி திருப்பரங்குன்றம் வேட்பாளராக்கும் பொறுப்பை பி.மூர்த்தி எம்எல்ஏ.விடம் கட்சித் தலைமை ஒப்படைத்துள்ளது.

இரு கட்சிகளிலும் வேட்பாளராக பலரும் முயற்சிக்கின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின்னரே இத்தொகுதி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கப்படும் என இரு கட்சித்தலைமையும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீட் பெற முயற்சிப்போர், கூட்டணிக் கட்சியினரிடம் நெருங்கிப் பழகியும், தேர்தல் பணியில் தீவிரம் காட்டுவதிலும் தங்களை முன்னி லைப்படுத்திக் கொள்கின்றனர். இதுவரை பட்டும், படாமல் இருந்த சிலர் காட்டும் திடீர் ஆர்வம், சக கட்சியினருக்கே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தேர்தல் அறிவிப்பால் திருப்பரங் குன்றம் தொகுதி அதிமுக.வினர் சுறுசுறுப் படைந்துள்ளனர். இதனால்,  விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி தரப்பினர் தங்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x