Last Updated : 29 Apr, 2019 12:00 AM

 

Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM

மதுரை சிறையில் கைதிகள் போராட்டம்: வழக்கு பதிவு செய்வதில் தாமதம் ஏன்?

மதுரை மத்திய சிறையில் கைதிகள் போராட்டம் குறித்து காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதுரை மத்திய சிறையில் 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் விசாரணைக் கைதிகள் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சிறை வளாகத்துக்குள் இருக்கும் பழைய கட்டிடத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தினர். சோதனை என்ற பெயரில் விசாரணைக் கைதிகளை காவலர்கள் துன்புறுத்துவதாகப் புகார் தெரிவித்து கோஷமிட்டனர். நீதிபதிகள், ஆட்சியர் நேரில் விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். சிறை வளாகத்தைச் சுற்றிலும் போலீஸார் குவிக்கப்பட்டனர். சுமார் 3 மணி நேரப்போராட்டத்துக்குபின், அதிகாரிகளின் சமரசப் பேச்சுவார்த்தையால் கைதிகள் அனைவரும் கீழே இறங்கினர்.

இதைத் தொடர்ந்து நீதி பதிகள் சிறை வளாகத்தில் ஆய்வு செய்தனர். சம்பவம் குறித்து கைதிகள், காவலர்கள், அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இது தொடர்பான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, சிறைத் துறை டிஐஜி பழனி உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டம் குறித்த ஆதாரங்கள், ஆவணங்களை சமர்ப்பித்தனர்.

அதே நேரம், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் இன்னும் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் சிறை நிர்வாகம் சார்பில் கரிமேடு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதற்கு பின்பும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இது குறித்து விசாரித்தபோது, சில நடைமுறைச் சிக்கல் காரணமாக வழக்குப் பதிவதில் தாமதம் ஏற்பட் டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிறைத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:பொதுவாக சிறை வளாகத்தில் கைதிகளுக்குள் மோதல், கலவரம், போராட்டம் ஏற்பட்டால் நீதிமன்றம் வழிகாட்டுதலின்பேரில் தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். காவல்துறையும், சிறைத் துறையும் சீருடைப் பணியாளர்கள் என்பதால் பாரபட்சமான செயல்பாடுகளை தவிர்க்கும் வகையில் இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. மதுரை சிறைக்குள் கைதிகள் போராட்டம் நடத்தியது குறித்து சிறை நிர்வாகம் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. மேலும், அது தொடர்பான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவுக்குப் பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x