Published : 11 Apr 2019 02:53 PM
Last Updated : 11 Apr 2019 02:53 PM
புதுச்சேரியில் மேடையில் தான் பேசும் போது நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்காருமாறு கூறினார்.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பல சுவாரஸ்யங்கள் நிகழ்கின்றன. கூட்டணிக் கட்சியினரை மதிப்பது என்பதும் அதில் ஒன்று. அண்மையில் ஆரணி தொகுதி போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏழுமலைக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்யும்போது ஏழுமலையை எழுந்து வந்து நிற்குமாறு பேசிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் புதுச்சேரியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தையும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வெங்கடேசனையும் ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசத் தொடங்கினார்.
ஸ்டாலின் பேசும் போது அவரது இருபுறமும் வேட்பாளர்கள் நின்றபடி இருந்தனர். சிறிது நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை பார்த்த ஸ்டாலின், "நீங்கள் உட்காருங்கள்" என்று குறிப்பிட்டார். அதற்கு அவர், "பரவாயில்லை" என்று கூறி விட்டு அவர் பேசி முடிக்கும் வரை நின்றிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT