Published : 13 Apr 2019 12:00 AM
Last Updated : 13 Apr 2019 12:00 AM
சோளிங்கர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் தொகுதியை தக்க வைத்துகொள்ள அதிமுகவும், தொகுதியை கைப்பற்ற திமுக வும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளன. அமமுக அமைதியாக தெரிந்தாலும் கடைசி நேரத்தில் கருப்புக் குதிரையாக வலம் வரலாம் என்று கருதப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான சோளிங்கர் இடைத் தேர்தலில் 1,28,457 ஆண் வாக்காளர், 1,31,412 பெண் வாக்காளர்கள் என 2,59,869 வாக்காளர்கள் வாக்களிக்கத் தயா ராக உள்ளனர். ஆட்சியை தக்க வைக்க அதிமுகவுக்கும் ஆட்சியை தட்டிப் பறிக்க திமுகவுக்கும் இடையில் நடைபெறும் போர்க் களமாக இந்த இடைத் தேர்தல் பார்க்கப்படுகிறது. சோளிங்கர் தொகுதியில் ஜி.சம்பத் (அதிமுக), ஏ.அசோகன் (திமுக), டி.ஜி.மணி (அமமுக), கோபாலகிருஷ்ணன் (நாம் தமிழர் கட்சி), மலையராஜன் (மக்கள் நீதி மய்யம்) என மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக, திமுக, அமமுக என மும்முனைப் போட்டியாக இருக்கும் சோளிங்கர் தொகுதி யில் எளிதான வெற்றியை பெற்று விடுவோம் என்ற உறுதியோடு அதிமுக உள்ளது. ஏனென்றால், கடந்த 2016 தேர்தலில் இங்கு தனித்து போட்டியிட்ட பாமக 50,827 வாக்குகள் பெற்று மூன்றா மிடத்தைப் பிடித்தது. இம்முறை பாமக கூட்டணியில் இருப்பதால் வெற்றி எங்களுக்குதான் என அதிமுகவுக்கு நம்பிக்கையுடன் உள்ளது. சோளிங்கர் தொகுதியில் அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு திமுக நேரடியாக களத்தில் இறங்கியுள்ளது.
கடைசியாக 1967-ம் ஆண்டு தேர்தலில் திமுகவைச் சேர்ந்த அரங்கநாதன் வெற்றிபெற்றுள்ளார். இதுவரை கூட்டணி கட்சிகளுக்கே இந்தத் தொகுதி ஒதுக்கப்பட்டு வந்தது. கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இந்தமுறை சோளிங்கர் தொகுதியை திமுக விரும்பி கேட்டுப் பெற்று போட்டியிடுவது தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத் தியுள்ளது. அதிமுகவின் வாக்குகளை அமமுகவினர் பிரிப்பது, அரசுக்கு எதிரான வாக்குகள், பட்டியலின மக்களின் வாக்குகளால் முன்னணிக்கு வரலாம் என்பது திமுகவின் கணக்காக உள்ளது.
அமமுக வேட்பாளராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ என்.ஜி.பார்த்தீபன் மீண்டும் இதே தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் அரக்கோணம் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு பதிலாக நெமிலி ஒன்றியத்தில் இருந்து அமமுக வேட்பாளராக டி.ஜி.மணி போட்டியிடுகிறார். ஏற்கெனவே பார்த்தீபன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செய்து வைத்துள்ள களப்பணியால் எளிதான வெற்றியை பெற்றுவிடுவோம் என்று நம்பிக்கை கூறுகிறார்.
சோளிங்கர் தொகுதியாக இருந்தாலும் தனி தாலுகா இல்லாதது மக்களின் பெரும் குறையாக இருக்கிறது. சோளிங் கர் லட்சுமி நரசிம்மர் மலைக் கோயிலுக்கு ரோப் கார் வசதி, புறவழிச்சாலை திட்டம், குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், தொழிற்பேட்டை அமைப்பது உள்ளிட்டவை தொகுதியின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT