Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM
கள்ளக்குறிச்சித் தொகுதியில் களம் காணும் தேமுதிகவினருக்கு அதிமுகவினர் போதிய ஒத்து ழைப்பு வழங்கவில்லை என்று வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தல் அறிவிப் பதற்கு முன் அதிமுக கூட்டணியில் முதன்முறையாக பாமகவுடன் கூட்டணி ஒப்பந்தம் போடப்பட்டது. அதைத் தொடர்ந்தே தேமுதிக, அதிமுகவிற்கும் இடையே இடை வெளி ஏற்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி பேரம் நடத்திக் கொண்டி ருக்கும் சூழலில், மறுபுறம் திமுகவு டன் தேமுதிக பேச்சு நடத்தியதும், திமுக பொருளாளர் துரைமுருகன் மூலமாக அம்பலமானது.
இதனால் தர்மசங்கடமான நிலைக்கு ஆளான தேமுதிக, ஒரு வழியாக 4 சீட்டுக்களுடன் தேர்தல் களமிறங்கியது.
4 தொகுதிகளில் ஒன்றான கள்ளக்குறிச்சித் தொகுதியில் தேமுதிமுகவின் இளைஞரணித் தலைவர் எல்.கே.சுதீஷ் களமிறக் கப்பட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் சி.வி.சண்முகம், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுரு ஆகியோ ருக்கு கள்ளக்குறிச்சித் தொகு தியில் தேர்தல் பணிகள் ஒதுக்கப் பட்டிருந்தன.
துவக்கத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு என தேர்தல் வேலைகள் வேகமாக சென்றன. தற்போது சுணக்கம் நிலவுகிறது.
குறிப்பாக கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், சங்கராபுரம், ஏற்காடு ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் சுதீஷ் வாக்கு சேகரிக்க கிராமம் கிராம மாக சென்றபோது, சுவர் விளம்பரங் களில் உதயசூரியனே தென்பட, சற்று அதிருப்தியடைந்து, சொந்தக் கட்சியினரை அழைத்து கடிந்துள் ளார்.
மேலும் பிரச்சாரத்திற்காக ராமதாஸ், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ஆத்தூர் வந்தபோது, அதிமுகவினர் கொடிகள் சொற்ப அளவில் இருப்பதை அறிந்து கவலைக்கு ஆளாகியுள்ளார். பின்னர் கட்சியினரை அழைத்து விசாரித்துள்ளார். கட்சியினரோ, தேர்தல் பணிகளை அதிமுக தான் தலைமையேற்று நடத்துகி றது. அவர்கள் போதிய ஒத்து ழைப்பு வழங்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
மேலும் தியாகதுருகம் ரிஷிவந்தியம், சங்கராபுரம் ஒன்றி யங்களில் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கியிருப்பதாகவும் தேமுதிக வினர் கூறி வந்தனர்.
இது தொடர்பாக இந்து தமிழ் திசையில் ஏப்ரல் 1-ம் தேதி செய்தியும் வெளியிடப்பட்டது.
தேர்தல் பணிகளில் அதிமுகவி னர் காட்டும் தொய்வுக் குறித்து, முதல்வரிடம் சுதீஷ் நேரடியாக புகார் செய்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து முதல்வர், உளுந்தூர்ப்பேட்டை எம்எல்ஏ குமரகுருவிடம் பேசியதாகவும், ஆனால் அவரோ, எல்லாமே சி.வி.சண்முகம் தான் பார்க்கிறார், அவரிடம் தான் நீங்கள் கூற வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிகிறது.
இதையடுத்து சி.வி.சண் முகத்தை தொடர்பு கொண்ட முதல்வர், தேர்தல் பணிகள் குறித்து சுதீஷ், முறையீடு தொடர்பாக பேசியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கட்சி நிர்வாகிகளை அழைத்த சி.வி.சண்முகம், நாம் யாரும் சரியாக வேலை செய்யவில்லை என புகார் சொல்கிறார்களாம், எனவே சுவர் விளம்பரம் செய்யுங்கள், பெயிண்ட் கிடைக்கவில்லை என்றால் கூட கவலை வேண்டாம், கரி துண்டை கொண்டாவது சுவர் விளம்பரம் செய்யுங்கப்பா என்று விரக்தியோடு கூறியதாக அதிமுகவினர் நொந்து கொள்கின்றனர்.
இதனிடையே முதல்வர் பழனிசாமி, ஆத்தூரைச் சேர்ந்த சேலம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவனை அழைத்து, சுதீஷின் தேர்தல் பணிகளை நீங்கள் தான் முன்னின்று நடத்த வேண்டும் என கட்டளையிட்டதோடு, அவர் வெற்றி பெற்றார் என்ற தகவலோடு தான் தன்னை பார்க்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.
இதையறிந்த சுதீஷ் உற்சா கமாகி, கடந்த இரு தினங்களாக ஆத்தூர் இளங்கோவனுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT