Published : 07 Apr 2019 12:00 AM
Last Updated : 07 Apr 2019 12:00 AM
ஊருக்குள் அரசியல் நுழைந்தால் மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பகைமை உருவாகும் என்பதால் 72 ஆண்டுகளாக கட்சிகளின் கொடிகளுக்கும், தேர்தல் விளம்பரங்களுக்கும், தடை விதித்தது மட்டுமின்றி அதை இன்றளவும் கடைப் பிடித்து வருகின்றனர் விருதுநகர் மாவட்டம், மருதநந்தம் கிராம மக்கள்.
விருதுநகர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆமத்தூர் அருகே சுமார் 400 குடியிருப்புகளைக் கொண்ட சிறிய கிராமம் மருதநத்தம். இங்கு பெரும்பாலானோர் ஆடு, மாடு வளர்க்கும் விவ சாயிகள். இந்த ஊரில் உள்ள 6 சமுதாயத்தினரும் கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.
நாடு சுதந்திரம் பெற்ற சிறிது காலத்தில், மருதநத்தம் கிராமத்தில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்தபோது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஊர் பெரியவர்களால் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கட்சிக் கொடிகளால் மக்களி டையே கருத்துவேறுபாடு ஏற்படுவதால் கிராமத்தில் யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியிலும் நிர்வாகியாகவோ, உறுப்பினராகவோ இருக்கலாம். ஆனால், கிராமத்துக்குள் கட்சிக் கொடிக்கம்பம் நடக் கூடாது. போஸ்டர்கள், பிளக்ஸ் பேனர்களை ஒட்டக்கூடாது. தேர்தலின்போது, வேட்பா ளருடன் இருவர் மட்டுமே கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுவர் ஆகிய கட்டு ப்பாடுகளை ஊர் பெரியவர்கள் விதித்தனர். அதை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.
திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளுக்கு போஸ்டர் ஒட்ட விரும்பினால் ஊர் எல்லையில் அதற்காகவே ஒரு சுவர் ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கு விழா நாளன்று காலையில் போஸ்டர் ஒட்டினால் மாலையில் கட்டாயம் அகற்றி விட வேண்டும். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஊருக்குள் வரும்போது அவர்களை வரவேற்றும், வாழ்த் தியும் பேனர்கள் வைப்பதற்கும், தோரணங்கள், வரவேற்பு கொடி கள் கட்டவும் கிராமத்தில் அனுமதி இல்லை.
இதுகுறித்து, மருதநத்தத்தைச் சேர்ந்த அழகர்சாமி (67) கூறிய தாவது: எங்கள் ஊரில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், கட்சி சார்ந்த விஷயங்களை மற்ற வர்களிடம் பேசிக் கொள்ள மாட்டோம். ஊர் பெரியவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை இன்ற ளவும் பின்பற்றி வருகிறோம் என்றார். தங்கப்பாண்டியன் (70) கூறுகையில், எந்தத் தேர்தல் வந்தாலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கட்சி தொடர்பான பிரச்சாரங்களுக்கு மட்டும் ஊரில் அனுமதி கிடையாது. பிரச்சாரம் செய்ய வந்தால் வேட்பாளரை மட்டும் ஓட்டு கேட்க ஊருக்குள் அனுமதிப்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT